உங்கள் நடவடிக்கைகளைக் கண்காணிக்க அனுமதித்தால் பணம்.. வலை விரிக்கிறது பேஸ்புக் !

இந்நிலையில் இன்று, தங்கள் ஆன்லைன் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய அனுமதிக்கும் பயனாளர்களுக்கு பணம் கொடுக்கப்படும் என்று அதிரடியாய் அறிவித்துள்ளது பேஸ்புக் நிறுவனம். தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சராசரியாக, ஒவ்வொரு வீடுகளிலும் நான்கு பேர் கொண்ட குடும்பத்தில், ஆறு மொபைல் போன்கள் இருப்பதாக ஓர் ஆய்வு சொல்கிறது. ஆண்ட்ராய்டு போன்களில் அறிமுகமானதில் இருந்து, அதன் பயன்பாடு இந்தியாவின் தொலை தூர கிராமங்களில் கூட உச்சத்தில் இருக்கிறது. பல வில்லங்கங்களை வரவழைத்த டிக் – டாக் செயலியைத் தடைச் செய்து, மீண்டும் அனுமதி கொடுக்கும் அளவிற்கு பொது மக்கள் மோகத்துடன் இருக்கிறார்கள்.

social media

‘செல்ஃபி புள்ள’ என்று கலாய்க்கும் அளவிற்கு மிஸ்டர் க்ளீன் நடிகர் சிவக்குமாரை எரிச்சல் ஆக்குமளவிற்கு கொண்டுப் போனதும், ரசிகர் ஒருவரின் முகநூல் மோகம் தான். பேஸ்புக்கில் குவிக்கும் லைக்ஸ்களுக்காக விபரீதம் புரியாமல் எதையும் செய்ய தயாராய் இருக்கிறார்கள் மக்கள். பொள்ளாச்சி சம்பவத்திலும் பேஸ்புக் தொடர்பால் தான் பல பெண்கள் மோசம் போனார்கள். ஏற்கெனவே பயனாளர்களின் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்துவதாக பேஸ்புக் நிறுவனத்தின் மீதே தொடர்ந்து புகார்கள் வந்திருக்கின்றன. 

இந்நிலையில் இன்று, தங்கள் ஆன்லைன் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய அனுமதிக்கும் பயனாளர்களுக்கு பணம் கொடுக்கப்படும் என்று அதிரடியாய் அறிவித்துள்ளது பேஸ்புக் நிறுவனம். தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்காவில் இந்த புதிய திட்டத்தை கொண்டு வரவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

fb

ஆரம்ப நிலையில், இந்தியா மற்றும் அமெரிக்காவில் மட்டும் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது பேஸ்புக் நிறுவனம்.  ஸ்டடி (study) என்ற செயலியின் மூலம் பேஸ்புக் ஆய்வினை செய்ய உள்ளது. இதுகுறித்து பேஸ்புக்கில் விளம்பரங்கள் கொடுக்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் வெளியிடும் இந்த விளம்பரத்தை க்ளிக் செய்யும் பயனாளர்கள், அதில் பதிவு செய்த பின், அவர்கள் தகுதியானவர்கள் என்றால், ஸ்டடி செயலியை பதிவிறக்கம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...