Home லைப்ஸ்டைல் அழகு குறிப்புகள் உங்களுக்கு திருமணம் ஆகப் போகிறதா… அப்போ இதெல்லாம் மறக்காம செய்யுங்க… இந்த பதிவு ஆண்களுக்கு மட்டுமே !

உங்களுக்கு திருமணம் ஆகப் போகிறதா… அப்போ இதெல்லாம் மறக்காம செய்யுங்க… இந்த பதிவு ஆண்களுக்கு மட்டுமே !

திருமணம் என்றால் எப்போதுமே பெண்கள் பேச்சுவார்த்தை முடிந்த அடுத்த நாளில் இருந்தே ஃபேஷியல்,ப்ளீச்,ஐ ப்ரோன்னு ஆரம்பிச்சு தன்னோட ‘அழகை’ மேலும் அழகாக்குவது எப்படி என்று களத்தில் இறங்கிருவாங்க.பசங்க அப்படிக்கிடையாது… கல்யாண வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க ஆரம்பிப்பதில் இதெல்லாம் கவனத்திலேயே இருக்காது.திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பு சின்னதா ஒரு டச் அப் ; அவ்வளவுதான்.

திருமணம் என்றால் எப்போதுமே பெண்கள் பேச்சுவார்த்தை முடிந்த அடுத்த நாளில் இருந்தே ஃபேஷியல்,ப்ளீச்,ஐ ப்ரோன்னு ஆரம்பிச்சு தன்னோட ‘அழகை’ மேலும் அழகாக்குவது எப்படி என்று களத்தில் இறங்கிருவாங்க.பசங்க அப்படிக்கிடையாது… கல்யாண வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க ஆரம்பிப்பதில் இதெல்லாம் கவனத்திலேயே இருக்காது.திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பு சின்னதா ஒரு டச் அப் ; அவ்வளவுதான்.

bride

பாவம்தாங்க பசங்க.. எப்போவும் அழகு குறிப்புக்கள் பெண்களுக்கு மட்டும்தானா ஆண்களுக்கு இல்லையா என கேட்கும் ஆண்களுக்காக…
மணமகன்கள் தங்களுடைய உடல் எடையையும் முகத்தையும் அழகாக மெயின்டைன் செய்வதற்கு அட்டகாசமான டிப்ஸ்!

ஆண்கள் தங்களுடைய ஆடைகளை நன்கு கவனம் செலுத்தி தேர்வு செய்ய வேண்டும் அதற்கேற்றவாறு உடல்வாகும் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அணிந்திருக்கும் ஆடைக்கும் உங்களுக்கும் செட் ஆகாமல் காமெடி பீஸாக தோன்றுவீர்கள்! ஆடை மிகவும் டைட்டாக இல்லாமலும் லூசாக இல்லாமலும் கரெக்ட் ஃபிட்டில் இருக்க வேண்டும்.

groom

ஆடைக்கேற்றவாறு உடலினை சரிசெய்து கொள்ளவேண்டும். உடலில் தேவையில்லாத இடங்களில் தொங்கும் தசைகளை குறைக்க வேண்டும். குறிப்பாக தோள்பட்டை அகலமாக இருந்தால் நன்றாக  இருக்கும், இடுப்பு பகுதியில், வயிற்று பகுதியில் காணப்படும் கொழுப்பை குறைக்க வேண்டும். அப்போது ஆடை கச்சிதமாக இருக்கும்.ஆண்கள் உடலினை மட்டும் சரி செய்தால் போதாது முகத்தினையும் பொலிவாக வைத்திருத்தல் அவசியம்!

டிப் 1:

கண்டிப்பாக தினசரி உடற்பயிற்சியில் ஈடுபடுதல் வேண்டும். 30 நிமிட உடற்பயிற்சியே போதுமானது. இல்லையென்றால் தினமும் பேட்மிண்டன், கால்பந்து, இவைகளில் ஏதோஒன்றை விளையாடுவதன் மூலம் உடற்கோழுப்பு குறையும். மேலும் உடல் எடை அதிகரிக்க ஸஃவட்ஸ் (squats), புஷ் அப்ஸ், புல் அப்ஸ், இவைகளுடன் ரன்னிங், ஜாக்கிங் போன்றவற்றையும் தினம் செய்ய வேண்டும்.

gym

டிப் 2:

ஜங்க் பூட்ஸ் சாப்பிடுவதை அடியோடு தவிர்க்க வேண்டும். அதிக அளவுள்ள சர்க்கரை, மாவு சேர்த்துள்ள பொருட்களை உண்ணவேண்டாம். மேலும் சிகரெட், மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் முடிந்தவரை உங்கள் திருமணத்திற்கு 2 மாதங்களுக்கு மட்டுமாவது நிப்பாட்டுங்கள்…உங்க கல்யாணத்துக்குதானே செய்யப்போறீங்க?! அதனால அவற்றை தவிர்த்திடுங்க.  

stop

டிப் 3:

டைம்க்கு சாப்புடுங்க, குறிப்பா மார்னிங் பிரேக் பாஸ்ட் ஓட்மீல்ஸ் மற்றம் ஆப்பிள், வாழைப்பழம் போன்று ஏதேனும் பழவகைகளை சேர்த்துக்கொள்ளுங்கள். காலி வயிற்றோடு இருக்க வேண்டாம் அதனால் ட்ரை பிரூட்ஸ், நட்ஸ், போன்றவற்றை சாப்பிட்டு கொண்டிருங்கள், மற்றும் சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்கள் சாப்பிடுங்கள்.இவை எல்லாம் அளவாக சாப்பிடவேண்டும்.இல்லையென்றால் அத்தனை முயற்சிக்கும் பலன் இல்லாமல் போய்விடும்.

eat

டிப் 4:
 
இரவு உணவில் பைபர் மற்றும் ப்ரோட்டீன் அடங்கிய உணவுகளை உண்ண வேண்டும். உதாரணமாக, சாலட் 200கிராம் வேகவைத்த கோழி அல்லது பசலைக்கீரை, முருங்கை சூப் ஒரு நல்ல இரவு நேர உணவாக அமையும்.

chicken

டிப் 5:

ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்பளர் தண்ணீர் குடிக்க வேண்டும். முகப்பொலிவிற்கு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிரம்பிய கேரட், முள்ளங்கி போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் 30நாட்களில் உங்கள் முகம் பொலிவாக மாறும்!

டிப் 6:

உங்கள் வருங்கால மனைவியிடம்  பேசலாம் ஆனால் இரவுகளில் ராக்கோழி மாதிரி தூங்காமல் விடிய விடிய பேசுவதைத் தவிர்த்து விட்டு நல்லா தூங்குங்க. நல்ல தூக்கம் மிகவும் முக்கியம், 8 மணி நேர ஓய்வு  ஒருவருக்கு மிக அவசியம். இல்லையென்றால் கருவளையம் வந்து உங்கள் முக அழகினை கெடுத்து விடும். 

men

அழகு என்பது அவ்வளவு கடினமன்று இதை யார் வேண்டுமானாலும் பெறலாம் அனால் அதற்கு நல்ல வாழ்க்கை முறைகளையும், மன அமைதியையும் மையமாக வைத்து வாழ்ந்தால் அனைவருமே அழகாக இருக்கலாம்! 

அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள் ப்ரோ.

Most Popular

ஆஞ்சநேயருக்கு வடை மாலைக்கு பதிலாக வாழைப்பழ மாலை !

பூந்தமல்லியில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமைகளில் ஆண்டுதோறும் 10,008 வடமாலை சாற்றுவது வழக்கம்.

தஞ்சாவூர்- பெரிய கோயில் முன்பு நாதஸ்வரம் வாசித்த இசைக் கலைஞர்கள்

தஞ்சாவூர் உலக சுற்றுலா தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், தஞ்சை பெரிய கோயில் முன் நாதச்வர கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஈரோடு- மீன் குஞ்சுகளை ஆற்றில் விட்ட அமைச்சர்கள்

நாட்டு மீன் இனங்களை பாதுகாக்கும் வகையிலும், உள்நாட்டு மீன் உற்பத்தியை பெருக்கும் வகையிலும் நாட்டு ரக மீன்குஞ்சுகள் பவானி ஆற்றில் விடப்பட்டன.இந்த நாட்டு ரக மீன் குஞ்சுகளை அமைச்சர்கள் செங்கோட்டையன்,...

சிதம்பரம்- 16 வயது பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலாத்காரம் – பெயிண்டர் உள்பட 2 பேர் கைது

சிதம்பரம் அருகே இருசக்கர வாகனத்தில் 16 வயது பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Do NOT follow this link or you will be banned from the site!