Home உலகம் ஈரானில் கொரோனா வைரஸ் அட்டகாசம் – ஒரேநாளில் 149 பேர் சாவு

ஈரானில் கொரோனா வைரஸ் அட்டகாசம் – ஒரேநாளில் 149 பேர் சாவு

சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக ஈரானிலும் கொரோனா வைரஸ் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது.

டெஹ்ரான்: சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக ஈரானிலும் கொரோனா வைரஸ் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் சர்வதேச சுகாதார அவசர நிலைஎன்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. ஆனால் சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ttn

ஈரானில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 1433-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் கொரோனா வைரஸால் புதிதாக 149 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் காய்ச்சலால் ஈரானில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனா, இத்தாலிக்கு அடுத்து ஈரானில்தான் கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. அந்த நாட்டில் 6745-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் அணி அசத்தல் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டின் 40வது ஆட்டத்தில் , ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ்...

விரைவில் கட்சி அப்டேட்… ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்யும் முறை அறிமுகம்

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களுடனான சந்திப்பின்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து,...

கூட்டணியை மாற்றும் ராமதாஸ்? அதிமுக அரசை சாடியதால் சர்ச்சை

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்காக ஆயத்தமாகி வருகின்றன. ஆளும் கட்சியான அதிமுகவில் நீடித்து வந்த முதல்வர் வேட்பாளர் பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு...

ஒரு மணி நேர மழை, தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை!- கமல்ஹாசன்

தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் பருவமழை தொடங்கவிருக்கிறது. பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல...
Do NOT follow this link or you will be banned from the site!