ஈபிஎஸ்-ஓபிஎஸ் டயர் நக்கிகள்: அ.தி.மு.க – பா.ம.க கூட்டணியை வச்சு செஞ்ச ஸ்டாலின்: கடுப்பான எடப்பாடி

ஈபிஎஸ்-ஓபிஎஸ் டயர் நக்கிகள் எனப் பட்டம் கொடுத்த அன்புமணி  அவர்களுடன் சேர்ந்து ஓட்டு கேட்டு வருவது பார்ப்பதற்குக் கேலிக்கூத்தாக உள்ளது  என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

அரூர்: ஈபிஎஸ்-ஓபிஎஸ் டயர் நக்கிகள் எனப் பட்டம் கொடுத்த அன்புமணி  அவர்களுடன் சேர்ந்து ஓட்டு கேட்டு வருவது பார்ப்பதற்குக் கேலிக்கூத்தாக உள்ளது  என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

அனல் பறக்கும் பிரச்சாரம்:

stalin

மக்களவை தேர்தலில் நெருங்கி வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துத் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மணி, தருமபுரி மக்களவை தொகுதி வேட்பாளர் செந்தில்குமார், அரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக அரூரில் அவர் பிரச்சாரம் செய்தார். 

 அதிமுகவை  அடகு வைத்த எடப்பாடி 

ops eps

அப்போது அங்கு நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ‘மோடி-அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி வணங்கிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்து விட்டார். அதிமுகவை அமித்ஷாவிடம் அடகு வைத்து  விட்டார்’ என்றார்.

 ஈபிஎஸ்-ஓபிஎஸ் டயர் நக்கிகள் 

pmk

அதிமுக – பாமக கூட்டணி குறித்து பேசிய முக ஸ்டாலின், ‘பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள அந்த கட்சியை சேர்ந்தவர்களே ஏற்க மனமில்லாமல் இருக்கின்றனர். அதிமுக அரசை பற்றி கடுமையாக விமர்சித்துப் பேசிய ராமதாஸ், அவர்களை தற்போது புகழ்ந்து வருவது வேடிக்கையாக உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது ராமதாஸ் மணியடிக்கிறார்.  ஈபிஎஸ்-ஓபிஎஸ் டயர் நக்கிகள் என பட்டம் கொடுத்த அன்புமணி  டயர்நக்கிகளுடன் இப்போது அன்புமணி ஓட்டு கேட்டு வருவது பார்ப்பதற்குக் கேலிக்கூத்தாக உள்ளது’ என்று கடுமையாக விமர்சித்தார். 

எடப்பாடி குற்றச்சாட்டு

tn cm

முன்னதாக திருப்பத்தூரில் பிரச்சாரம் செய்த  எடப்பாடி பழனிச்சாமி, பிரியாணி, தேங்காய், பஜ்ஜி, புரோட்டா கடைகளில் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டினார். 

Most Popular

“நாய் மாமாவாக மாறிய தாய் மாமாவால் வந்த விளைவு” -அனாதையாக ரோட்டில் அலையும் எட்டு மாத கர்ப்பிணி பெண் கதையை கேளுங்க .

பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 20 வயது இளம் பெண்ணை அவரின் பெற்றோர்கள் அனாதையாக விட்டு இறந்து விட்டார்கள் .அதற்கு பிறகு அந்த பெண் தன்னுடைய தாய் மாமா வீட்டில்...

அரசு அலுவகத்தில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாட்டின் 74வது சுதந்திர தினத்தன்று இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இருப்பினும் கொரோனா காலம் என்பதால் வழக்கமான கலை, நிகழ்ச்சிகள் இன்றி எளிமையாக விழா நடத்தப்பட்டது. அதன்படி தமிழக முதல்வர் பழனிசாமி கோட்டை கொத்தளத்தில்...

5 நாள் கடந்தும் கண் விழிக்காத பிரணாப்! – தீவிரமாக கண்காணித்து வருதாக மருத்துவமனை தகவல்

மூளையில் அறுவைசிகிச்சை முடிந்து ஐந்து நாட்கள் ஆன நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூளையில் ரத்தம் உறைந்ததால் ஏற்பட்ட...

கொரோனா சிகிச்சை வார்டில் கணினி ஆசிரியர்கள் பணியாற்ற உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பரிசோதனைகளை அதிகரிப்பது, நடமாடும் மருத்துவமனை, கொரோனா மருந்துகள் என பல்வேறு...
Do NOT follow this link or you will be banned from the site!