Home தமிழகம் ஈபிஎஸ்சுக்கு ஆதரவான போஸ்டர்கள்...அம்மா சமாதியில் மீண்டும் ஒரு தர்ம யுத்தத்திற்கு தயாராகும் ஓபிஎஸ்...

ஈபிஎஸ்சுக்கு ஆதரவான போஸ்டர்கள்…அம்மா சமாதியில் மீண்டும் ஒரு தர்ம யுத்தத்திற்கு தயாராகும் ஓபிஎஸ்…

இன்று சென்னையில் நடைபெற்றுவரும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தங்கள் பலத்தைக் காட்ட ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தயாராகி வருவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

இன்று சென்னையில் நடைபெற்றுவரும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தங்கள் பலத்தைக் காட்ட ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தயாராகி வருவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இக்கூட்டத்தின் முடிவில் ஓபிஎஸ்சை ஓரம் கட்டிவிட்டு ஈபிஎஸ் அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக முடிவெடித்திருக்கிறார் என்று பரவி வந்த தகவல்களை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக ’புதிய கழகப் பொதுச்செயலாளராகப் பதவியேற்க வரும் எடப்பாடியாரே’ என்று ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் பெரும்பரபரப்பை உண்டாக்கியுள்ளன. 

ops

நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வந்தார். எடப்பாடியில் இந்த செயல் ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்சி விவகாரம் குறித்து கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசிக்காமல் எதற்காக எடப்பாடி தனது வீட்டில் வைத்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்று பன்னீர்செல்வம் தரப்பு எரிச்சலில் இருந்தது. இந்த நிலையில் அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தேவை என்று பற்ற வைத்தார் ராஜன் செல்லப்பா. இதன் பின்னணியில் ஓ பன்னீர்செல்வம் இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் பெரம்பலூர் எம்எல்ஏ குன்னம் ராஜேந்திரன் ஓ பன்னீர்செல்வம் குடும்ப அரசியல் செய்வதாகவும் குடும்ப அரசியல் செய்பவர்களுக்கு சசிகலாவிற்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும் என்று மறைமுகமாக கூறி அதிர வைத்தார். 

eps

அதாவது ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் ஆதரவாக இரண்டு எம்எல்ஏக்கள் மாறி மாறி பேட்டி அளித்தனர். நிலைமை கையை மீறிச் செல்வதால் உடனடியாக அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என்று கூட்டியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்கள் எம்பிக்கள் மற்றும் அதிமுகவின் உயர்மட்ட நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

edapadi

இக்கூட்டத்தை ஒட்டி ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் தங்கள் பலத்தைக் காட்ட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமைக் கழகம் துவங்கி சென்னை நகர் முழுவதும் ஈபிஎஸ்சை தலைமைப் பொறுப்பை ஏற்கச்சொல்லும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.இதனால் இக்கூட்டத்தில் பெரும் சர்ச்சைகள் கிளம்பி ஓபிஎஸ் ஓரம் கட்டுப்படுவாரேயானால் இன்று மாலையே ஓபிஎஸ் அம்மாவின் சமாதியில் தர்ம யுத்தத்தில் ஈடுபடும் வாய்ப்பு இருக்கிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

‘பாலக்காடு டூ சென்னை’ – தினசரி விரைவு ரயில் டிச.8 முதல் இயக்கம்!

பொதுமுடக்கத்தால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து முடக்கி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் இயங்கத் தொடங்கின. உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் ரயில்களை இயக்க வேண்டும்...

மூன்று கட்சிகளிடம் சிக்கி விழிபிதுங்கும் ரஜினி!

கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தால் தூக்கம் கண்ணில் சொக்குமே அது அந்த காலமே.. மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும் கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்த காலமே.. என்று...

“வேல் யாத்திரையில் முதல்வர் ” : டிச.7ல் திருச்செந்தூரில் நிறைவு பெறும் என அறிவிப்பு!

வேல் யாத்திரை டிசம்பர் 7ல் திருச்செந்தூரில் நிறைவுபெறுகிறது என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

வீட்டுமனை பட்டா வழங்க கோரி, பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

திண்டுக்கல் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி, திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் வீடுகளில் கருப்புகொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் ரயில் நிலையம் அருகேயுள்ள...
Do NOT follow this link or you will be banned from the site!