Home இந்தியா இ.எம்.ஐ கட்டச் சொல்லி தொந்தரவு செய்யும் தனியார் வங்கிகள்! - ஆர்.பி.ஐ கண் விழிக்குமா?

இ.எம்.ஐ கட்டச் சொல்லி தொந்தரவு செய்யும் தனியார் வங்கிகள்! – ஆர்.பி.ஐ கண் விழிக்குமா?

கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில்கள் முடங்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல தனியார் நிறுவனங்கள் சம்பளத்தை வழங்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. சம்பளத்தை குறைக்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் பல மாநில அரசுகளே அவர்களது ஊழியர்களின் சம்பளத்தை குறைத்து வருகின்றன. இந்த நிலையில் தொழில் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் எப்படி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் என்று தெரியவில்லை.

கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில்கள் முடங்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல தனியார் நிறுவனங்கள் சம்பளத்தை வழங்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. சம்பளத்தை குறைக்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் பல மாநில அரசுகளே அவர்களது ஊழியர்களின் சம்பளத்தை குறைத்து வருகின்றன. இந்த நிலையில் தொழில் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் எப்படி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் என்று தெரியவில்லை.
வங்கிகள் மூன்று மாதத்துக்கு இ.எம்.ஐ வசூலிக்க ரிசர்வ் வங்கி தடைவிதித்தது. இ.எம்.ஐ வசூலிக்கக் கூடாது, அதற்கு வட்டி விதிக்கக் கூடாது என்று கூறியிருந்தது. இ.எம்.ஐ வாங்க தடை விதித்ததே தவிர, மூன்று மாத இ.எம்.ஐ-யை தள்ளுபடி செய்யவில்லை. இந்த மூன்று மாதத்தை கடைசியில் மூன்று மாதமாக நீட்டித்து வசூலிக்கலாம். தள்ளுபடி செய்யும்படி யாரும் கேட்கவும் இல்லை.

rbi-89

ஆனால், ரிசர்வ் வங்கியின் உத்தரவை எந்த ஒரு வங்கியும் மதித்ததாக தெரியவில்லை. பெயரளவுக்கு கட்ட வேண்டாம் என்று கூறிவிட்டு, கீழே மிகப்பெரிய நிபந்தனைகளையும் விதித்து வருகின்றன. 
அரசு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் உத்தரவை ஏற்பதாக அறிவித்துள்ளன. ஆனால் தனியார் வங்கிகள் யாருக்கு எல்லாம் இ.எம்.ஐ கட்ட முடியாதே அவர்கள் அது பற்றி அறிவிக்க வேண்டும் என்று புது உத்தரவை கூறியுள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இதற்காக விண்ணப்ப பக்கத்தையே தொடங்கியுள்ளது. அதில் வாடிக்கையாளர் தன்னுடைய மொபைல் மற்றும் பேன் எண்ணை கொடுத்து அவகாசம் பெற வேண்டுமாம். இவர்களுக்கு இந்த தவணைக்குத் தனியாக வட்டி வேறு விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது வங்கி நிர்வாகம். பல வங்கிகள் பணத்தை கட்டு, பணத்தை இருப்பில் வை என்று தொடர்ந்து எஸ்.எம்.எஸ், போன் கால் செய்து தொந்தரவு செய்து வருகின்றன. ஒரு தெளிவான முடிவு, உத்தரவு கூட பிறப்பிக்க முடியாத அளவுக்கு ரிசர்வ் வங்கி பலவீனமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

icici-bank.jpg

வாடிக்கையாளர்களிடம் இ.எம்.ஐ வசூலிக்க வேண்டாம் என்றால் அது அனைவருக்கும் பொருந்தும். யாராவது கட்ட விருப்பப்பட்டால் அவர்களிடம் கேட்டு அதன்படி செய்ய வேண்டிய வங்கிகள், கட்ட முடியாதவர்கள் வங்கியை அணுகும்படி கூறி வருகின்றன. இதனால், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் விண்ணப்ப பக்கம் முடங்கிப் போகும் அளவுக்கு வாடிக்கையாளர்கள் விண்ணப்பங்களை அனுப்ப குவிந்துவிட்டனர். வங்கிகளை மத்திய அரசு, ரிசர்வ் வங்கி கண்காணித்து உததரவை ஒழுங்காக பின்பற்ற வைக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்கும்போது குறைக்க மறுக்கும் வங்கிகள், வட்டி விகிதத்தை உயர்த்தினால் அத்தநாளே உயர்த்தி லாபம் சம்பாதிக்க ஆரம்பித்துவிடுகின்றன. ஏற்றமோ, இறக்கமோ எதுவாக இருந்தாலும் சமமாக பார்க்கும் நிலை வங்கிகளுக்கு எப்போதுதான் வருமோ!

Most Popular

சசிகலா வந்ததும் அதிமுக மீட்கப்படும்!

சிறையிலிருந்து சசிகலா வந்ததும் அதிமுக மீட்கப்படும் என அமமுக கட்சியின் பொருளாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல்...

வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் நடக்கும் ஸ்ரீரங்கம் ரெங்க நாச்சியார் திருவடி சேவை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கடந்த 17-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உற்சவம் 25ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும். இதனையொட்டி தாயார்...

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பெற்றோரிடம் நாளை கருத்து கேட்பு !

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பெற்றோர், மாணவர்களிடம் நாளை கருத்து கேட்பு நடைபெறுகிறது. மத்திய அரசின் புதிய கல்விக்...

ஐபிஎல் சூதாட்டம் – 6 பேர் கைது!

நடப்பு ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பெங்களூரில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஐபிஎல் என்று சொன்னாலே வெற்றி, தோல்வி என்பதை தாண்டி பல...
Do NOT follow this link or you will be banned from the site!