Home தமிழகம் இளமதியை கடத்தியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு! 

இளமதியை கடத்தியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு! 

திருமணத்திற்காக இளமதி என்ற பெண்ணை கடத்தியதாக செல்வன், கொளத்தூர் மணி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கவுந்தபாடியை சேர்ந்த செல்வன் என்பவர், குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதி என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இருவருக்கும், சேலம் மாவட்டம் காவலாண்டியூரில்  திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சுயமரியாதை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

இளமதி

அப்போது அங்கு வந்த 40-க்கும் மேற்பட்டோர், திருமணம் செய்து வைத்த திராவிடர் விடுதலை கழக பிரமுகர் ஈஸ்வரன் மற்றும் காதல் ஜோடியை கடுமையாக தாக்கி, காரில் கடத்தி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், விரைந்து சென்று ஈஸ்வரன் மற்றும் காதலர் செல்வனை மீட்டனர். ஆனால் இளம் பெண் இளமதியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் #இளமதி_ எங்கே என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. ஆனால் அவர் என்ன ஆனார் என்ற கவலை பலருக்கும் ஏற்பட்டது. இளமதி பற்றி நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பப்பட்டது. இந்நிலையில் சேலம் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளமதி ஆஜராகியுள்ளார். தனது வழக்கறிஞர் சரவணன் உடன் அவர் ஆஜராகியுள்ளார். தன்னுடைய பெற்றோருடன் செல்ல விரும்புவதாக இளமதி தெரிவித்ததாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். 

"சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் கொரோனா பரவட்டும்": இளமதி எங்கே? - ட்விட்டரில் ரெண்டாகும் ஹாஷ்டேக்

இந்நிலையில் பெண்ணின் தாய் அளித்த புகாரின்பேரில் இளமதியை கடத்தியதாக செல்வன், கொளத்தூர் மணி உள்ளிட்ட 4 பேர் மீது ஈரோடு மாவட்டம் பவானி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்நிலையத்தில் இருந்த திராவிடர் விடுதலைக் கழக ஆதரவாளர்கல் இளமதியிடம் பேச முயன்றனர். ஆனால் தான் யாரிடமும் பேச விரும்பவில்லை என்றும், பெற்றோருடன் சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார். 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

ஒரே நாடு ஒரே தேர்தல்- அச்சம் தெரிவிக்கும் அரசியல் கட்சிகள்!

ஒரே நாடு - ஒரே தேர்தல் முறை இந்தியாவுக்கு அவசியம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நவம்பர் 26 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்ட அரசியலமைப்பு நாளில், அரசின் உயர் அதிகாரிகள்...

ஸ்டாலின் என்ன புலன்விசாரணை விஜயகாந்தா? அமைச்சரின் கேள்வி

பரபரப்பான ஆட்டோ சங்கரின் வழக்கினை மையமாக கொண்டு ஆர்.கே.செல்வமணி எடுத்த படம் ‘புலன் விசாரணை’. விஜயகாந்த் அப்படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் விஜயகாந்த் அணிந்திருக்கும் கோட் போன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் வரத் தடை!

தீப விழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பொதுமக்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் பொதுமக்கள்...

மாரடோனா இறுதி ஊர்வலம் – இருபுறமும் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

கால்பந்தின் கடவுள் எனப் போற்றப்படுபவர் மாரடோனா. அவர் உடல்நிலை சரியில்லாமல் நேற்று முதன் நாள் இரவு இறந்தார். இந்த அதிர்ச்சியை ரசிகர்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. 21...
Do NOT follow this link or you will be banned from the site!