Home உலகம் இலங்கையில் மீண்டும் ' வெள்ளை வேன்' கடத்தல்கள் ஆரம்பம்!

இலங்கையில் மீண்டும் ‘ வெள்ளை வேன்’ கடத்தல்கள் ஆரம்பம்!

வெள்ளை வேன் பயங்கரம் மீண்டும் கிளம்பி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் மீண்டும் ' வெள்ளை வேன்' கடத்தல்கள் ஆரம்பம்!

மகிந்த ராசபக்ச இலங்கைய ஆண்டபோது அரசுக்கு எதிராக கருத்துச் சொல்பவர்களை,முக்கியமாக தமிழர்களை ஒரு வெள்ளை வேனில் கடத்தி , சித்திரவதை செய்தது,போருக்கு பிந்திய விசாரணையில் வெளிவந்தது.அந்த வெள்ளை வேன்களில் ஒன்றின் ஓட்டுநர் , தாங்கள் கடத்தும் விதம்,சித்திரவதை செய்யும் முறை எல்லாவற்றையும் நீதி மன்றத்தில் விவரித்து ,இறந்தவர்களின் உடல்களை முதலைகளுகு போட்டு விடுவோம் என்றும் சொல்லி இருந்தார்.அத்தகைய வெள்ளை வேன் பயங்கரம் மீண்டும் கிளம்பி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ttn

கொழும்பில் இருக்கும் ஸ்விஸ் நாட்டு தூதரகத்தில் வேலை செய்பவர் கனியா பேனிஸ்ட்டர் ஃபிரான்சிஸ்!. இந்தப் பெண் தன்னை ஒரு வெள்ளை வேனில் வந்த சிலர் கடத்திக்கொண்டு போய் சித்திரவதை செய்ததாகவும் தன்னை ஒரு தனியிடத்தில் அடைத்து வைத்து பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுத்து இலங்கையில் இருந்து சுவிஸ்ர்லாந்துக்கு தப்பிச்சென்றுவிட்ட காவல்துறை அதிகாரி நிஷாந்த் சில்வா பற்றி கேள்விகள் கேட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.

ttn

இதை கோத்தபாய வன்மையாக மறுத்திருப்பதுடன் இது ஒரு திட்டமிட்ட நாடகம் என்று சொல்லி இருக்கிறார்.இதற்கு விடை இந்த நிஷாந்த் சில்வா யார் என்பதில் இருக்கிறது. மகிந்த தேர்தலில் தோற்று ஆட்சி மாறியதும் அமைக்கப்பட்ட காவல்துறை ( சி.ஐ.டி) விசாரணை குழுக்களில் ஒன்றிற்கு தலைமை தாங்கியவர் இன்ஸ்பெக்டர் நிஷாந்த் ,ராசபக்ச சகோதரர்களின் ஊழல்களைப் பற்றி சண்டேலீடரில் எழுதிய.பத்திரிகையாளர் விக்கிரமதுங்க காணாமல் போனது,வித்தியா சிவலோகநாதன் என்கிற 18 வயது பெண்ணைக் கடத்திச் சீரழித்து கொன்றது,11 தமிழ்சிறுவர்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இன்றைய இலங்கை பாதுகாப்புத் துறை தலைவர் ரவீந்தர விஜயகுனரட்ன சம்பந்தப்பட்ட வழக்கு போன்ற சென்ஸ்டிவான வழக்குகளை விசாரித்து வந்த அதிகாரி அவர்.

 

இந்த வழக்குகள் எல்லாவற்றிலும் ராசபக்ச சகோதரர்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்கிருக்கிறது.அதனால் கோத்தபாய பதவி ஏற்கப்போகிறார் என்றதுமே சில்வாவின் காவலர் படை விலக்கிக் கொள்ளப்பட்டதாம், அதனால் , உஷாரான் சில்வா தன் குடும்பத்துடன் சுவிஸுக்கு தப்பிச்சென்று விட்டார்.ராஜபக்ச சகோதரர்களின் ரகசியங்கள் தெரிந்த ஒருவர் இப்போது ஸ்விஸ் தப்பிவிட்ட நிலையில் இன்னும் இது போன்ற 700 போலீஸ் , மற்றும் ராணிவத்தினர் இலங்கையை விட்டு தப்பிச் செல்லக்கூடும் என்று ராசபக்ச சகோதரர்கள் சந்தேகிப்பதால் இலங்கையின் விமான நிலையங்கள் அனைத்தும் எச்சரிக்கை செய்யப்பட்டு இருக்கின்றன என்றும் தகவல்கள் வருகின்றன.

இலங்கையில் மீண்டும் ' வெள்ளை வேன்' கடத்தல்கள் ஆரம்பம்!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு கிடைக்கும்… தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். மகாராஷ்டிராவின் நவி மும்பையில் தொழிலாளர் தலைவர் மறைந்த...

ஆப்கானிஸ்தானில் நிறைய முதலீடு செய்துள்ளோம்.. தலிபான்களுடன் இந்திய அரசு பேச வேண்டும்.. பரூக் அப்துல்லா

ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி செய்யும் தலிபான்களுடன் இந்திய அரசு பேச வேண்டும் என்று பரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானை தீவிரவாத அமைப்பான தலிபான் கைப்பற்றியுள்ளது. தற்போது...

பஞ்சாப் அமைச்சரவை இன்று விரிவாக்கம்.. அமரீந்தர் சிங் ஆதரவாளர்கள் பதவியை இழக்க நேரிடும்

பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் ஆதரவாளர்கள் அமைச்சர் பதவியை...

பணம் மற்றும் அதிகாரத்தின் ஆதரவாளரான பா.ஜ.க. ஆரம்பத்தில் இருந்தே சமூக நீதியை எதிர்க்கிறது… அகிலேஷ் யாதவ்

பணம் மற்றும் அதிகாரத்தின் ஆதரவாளரான பா.ஜ.க. ஆரம்பத்தில் இருந்தே சமூக நீதியை எதிர்க்கிறது என்று அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார். 2021ம் ஆண்டு மக்கள் தொகை...
TopTamilNews