Home உலகம் இலங்கையில் கடும் குழப்பம்; நாடாளுமன்றத்தை முடக்கினார் அதிபர் சிறிசேன

இலங்கையில் கடும் குழப்பம்; நாடாளுமன்றத்தை முடக்கினார் அதிபர் சிறிசேன

நான் பிரதமராக தொடர்கிறேன் என ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ள நிலையில் நாடாளுமன்றத்தை அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன முடக்கியுள்ளார்

கொழும்பு: நான் பிரதமராக தொடர்கிறேன் என ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ள நிலையில் நாடாளுமன்றத்தை அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன முடக்கியுள்ளார்.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே அதிரடியாக நீக்கப்பட்டு, அந்நாட்டின் முன்னாள்; அதிபர் மஹிந்த ராஜபக்சே புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ராஜபக்சே பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டார். இது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே, ராஜபக்சே பிரதமராக பதவியேற்றது இலங்கை அரசியல் சாசனப்படி செல்லாது. நாடாளுமன்றத்தில் எனக்கே பெரும்பான்மை உள்ளது. நானே  பிரதமராக தொடர்கிறேன் என ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடவும் அவர் முடிவு செய்துள்ளார். இதனால், அந்நாட்டில் குழப்பமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், வருகிற நவம்பர் மாதம் 16-ம் தேதி வரை அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் மைத்திரிபால சிறிசேன முடக்கியுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

5 தொகுதிகளை கேட்டோம்; 3 தான் கொடுத்தார்கள்- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இந்திய முஸ்லீம் லீக் சார்பாக 6 நிர்வாகிகள் திமுக நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதில் திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன....

கல் குவாரி அமைக்க எதிர்ப்பு… தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை…

தூத்துக்குடி ஶ்ரீவைகுண்டம் அருகே கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுகவுடன் மமக, முஸ்லீம் லீக் தொகுதி பங்கீடு கையெழுத்தானது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி தொடர்பாக திமுக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில், மமகவும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு...

கங்கனா ரணாவத்துக்கு பிடிவாரண்ட்

பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கன ரணாவத், இந்தி பாடலாரிசியர் ஜாவித் அக்பர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
TopTamilNews