Home தமிழகம் இறந்த தந்தையின் உடல் முன்பு காதலியை திருமணம் செய்து கொண்ட மகன்: கலங்க வைக்கும் சம்பவம்!

இறந்த தந்தையின் உடல் முன்பு காதலியை திருமணம் செய்து கொண்ட மகன்: கலங்க வைக்கும் சம்பவம்!

ஜெகதீஸ்வரிக்கும் அடுத்த மாதம் 2-ந்தேதி மயிலம் முருகன் கோவிலில் திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

திண்டிவனம் : இறந்து போன  தந்தையின் உடல் முன்பு மகன் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டிவனம் அருகே உள்ள சிங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வமணி. இவரது  மகன் அலெக்சாண்டர். இவர் மயிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஜெகதீஸ்வரி என்ற சக ஆசிரியைக்கும் காதல் மலர்ந்துள்ளது.

love

இதுகுறித்து இருவீட்டாரிடமும் கூறியுள்ளனர்.  இதனால் இருகுடும்பத்தினர் சம்மதத்துடன் அலெக்சாண்டருக்கும், ஜெகதீஸ்வரிக்கும் அடுத்த மாதம் 2-ந்தேதி மயிலம் முருகன் கோவிலில் திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

marriage

திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்த நிலையில், தெய்வமணி உடல்நலக் குறைவு ஏற்பட்டு திடீரென்று மரணமடைந்துள்ளார் .இது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தந்தையின் மீது அளவுகடந்த அன்பு கொண்டிருந்த  அலெக்சாண்டருக்கு அப்பாவின் மறைவு பேரிழப்பாக இருந்தது. தந்தையின் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்த அவரது ஆசையும் நடக்காமல் போனது. 

இதையடுத்து தந்தையின் உடலின் முன்பாவது தன்னுடைய திருமணம் நடக்க வேண்டும் என்று  எண்ணிய அலெக்சாண்டர், இதுகுறித்து இரு வீட்டாரிடமும் கூறியுள்ளார். இதற்கு அவர் குடும்பம் மட்டுமில்லாது ஜெகதீஸ்வரி குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இறந்த தந்தையின் கைகளில் தாலியை வைத்து அவரின் உடலுக்கு முன்பாக அலெக்சாண்டர், ஜெகதீஸ்வரியின் கழுத்தில் கட்டினார். அப்போது இரு குடும்பத்தாரும் கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கலங்கச் செய்தது. 
 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

ஐபிஎல்: டெல்லி அணியை வீழ்த்தி ஐதராபாத் சன்ரைசர்ஸ் அசத்தல் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று 47-வது ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ்...

தோஷங்களை போக்கும் பிரதோஷத்தில் சோமசூக்த பிரதட்சணம்!

உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து, தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் சிவப்பெருமான். இவ்வாறு உலகை காத்த உத்தமனான பரமனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம்....

புத்தகத்தில் உள்ளதை திருமா மேற்கோள் காட்டினார்; அவரே சொன்னதுபோல் பாஜக அரசியல் செய்கிறது- கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “குஷ்பு முன்னாள் நடிகை என்பதனால் அவரது கைதை...

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! சமூக வலைதளத்தில் உலாவரும் ரஜினியின் கடிதம்…

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களுடனான சந்திப்பின்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து,...
Do NOT follow this link or you will be banned from the site!