Home இந்தியா இறக்குமதி செய்யப்படுவது வெங்காயம் மட்டுமா வியாதிகளுமா!

இறக்குமதி செய்யப்படுவது வெங்காயம் மட்டுமா வியாதிகளுமா!

வெங்காயம் மூன்று மாதப்பயிர்.அறுவடை முடிந்ததும் அந்த வெங்காயத்தில் ஒருபகுதியை அடுத்த நடவுக்காக எடுத்து வைப்பார்கள்.ஆனால் இப்போது கிடைக்கும் கூடுதல் விலைக்கு ஆசைப்பட்டு அந்த விதை வெங்காயத்தை கூட விற்பனை செய்து விட்டார்கள் விவசாயிகள். இப்படியே போனால் எப்போதும் இறக்குமதியை நம்பியே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

வெங்காயம் மூன்று மாதப்பயிர்.அறுவடை முடிந்ததும் அந்த வெங்காயத்தில் ஒருபகுதியை அடுத்த நடவுக்காக எடுத்து வைப்பார்கள்.ஆனால் இப்போது கிடைக்கும் கூடுதல் விலைக்கு ஆசைப்பட்டு அந்த விதை வெங்காயத்தை கூட விற்பனை செய்து விட்டார்கள் விவசாயிகள். இப்படியே போனால் எப்போதும் இறக்குமதியை நம்பியே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

onion

பொதுவாக வேளாண் பொருட்களை வேறு ஒரு நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் போது அதோடு சேர்ந்து புதிய நோய்க் காரணிகள் ஊடுருவாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.அமெரிகாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்தபோது அத்துடன் சேர்ந்து வந்ததுதான் வேலிக்காத்தான் என்று ஒரு நம்பிக்கை உண்டு.

உண்மையிலேயே 1956-ல் இந்தியாவில் உணவு பொருள் தட்டுபாடு ஏற்பட்ட போது பி.எல்.480 திட்டத்தின் கீழ் ஒரு கோடியே ஐம்பது லட்சம் டன் கோதுமை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய பட்டது.அதோடு சேர்ந்துதான் பார்த்தீனியம் என்கிற விஷச் செடி இந்தியாவில் ஊடுருவியது.இந்த செடியால் மண்ணுக்கும், உயிரினங்களின் ஆரோக்கியத்துக்கும் ஏராளமான கேடுகள் விளைந்தன. விதைகளை இறக்குமதி செய்யும்ப்போது நுண்ணுயிர் நீக்கம் செய்ய முடியும் ஆனால் உணவுப்பொருட்களை அப்படி செய்ய முடியாது.

pathenium

பொதுவாகவே வெங்காயம் இளம் பயிராக இருக்கும்போது கோழிக்கால் நோய் என்கிற பூஞ்சை தாக்குதல் நடக்கும்.அதனால் விதைக்கும் முன் பூஞ்சண கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி நுண்ணுயிர்  நீக்கம் செய்வார்கள்.
இப்போது இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் இது போன்ற விபரீதங்களைக் கொண்டு வந்து சேர்க்கலாம்.ஆகவே மத்திய மாநில அரசுகள் தற்போதைய தேவையை மட்டும் பார்க்காமல், இது போன்ற சாத்தியங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும். 

onion

நடவுக்கான விதை வெங்காயத்தை மானிய விலையில் தரவேண்டும். விளைச்சலுக்கு ஒரு நியாயமான விலையையும் அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்,இல்லா விட்டால் எதிர் காலத்தில் இத்தகைய அவல நிலை தொடர்வதை தவிர்க்க முடியாது என்று வேளான்குடி மக்கள் தெரிவிக்கிறார்கள்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ரஜினி பிறந்தநாளுக்கு முன்பாக அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பார்!

ரஜினிகாந்த் என்ன சொல்லப்போகிறார் என்ற குழப்பம் எனக்கும் உள்ளது என்று அவரது அண்ணன் அண்ணன் சத்யநாராயணா தெரிவித்துள்ளார். நடிகர்...

புதுமைப்பித்தன் பார்த்திபனுக்கு புதுச்சேரி அரசின் விருது

தமிழ்சினிமாவின் புதுமைப்பித்தன் என்று அழைக்கப்படும் பார்த்திபன், படம் முழுவதும் ஒரே ஒரு கதாபாத்திரைத்தை மட்டுமே வைத்து எடுத்திருந்த ஒத்த செருப்பு சைஸ்-7 என்ற படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி நிறுவனர் ஆனைமுத்து மருத்துவமனையில் அனுமதி!

மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனர் வே.ஆனைமுத்து உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரியாரியப் பெருந்தொண்டரும் மார்க்சிய...

சைக்கிளில் சென்ற நடிகர் கவுதம் கார்த்திக்கின் செல்போன் பறிப்பு!

ஆழ்வார்பேட்டை அருகே நடிகர் கவுதம் கார்த்திக்கின் செல்போனை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பிரபல நடிகர்...
Do NOT follow this link or you will be banned from the site!