Home அரசியல் இரண்டு நாட்கள் தூக்கமில்லாமல் தவித்தார் மு.க.ஸ்டாலின்: உண்மையை உடைத்த வைகோ

இரண்டு நாட்கள் தூக்கமில்லாமல் தவித்தார் மு.க.ஸ்டாலின்: உண்மையை உடைத்த வைகோ

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுகவின் தலைமை  அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின்  மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை: மாநிலங்களவை தேர்தலுக்கான எனது வேட்புமனு நிராகரிக்கப்படுமோ என்ற கவலையில் முக ஸ்டாலின் இரண்டு நாட்கள் தூங்காமல்  இருந்தார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

vaiko

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுகவின் தலைமை  அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின்  மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசிய வைகோ, நான் மாநிலங்களவைக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பியவர் முக ஸ்டாலின் தான். அதனால் தான் அவர் எனக்கு சீட் கொடுத்தார். தேசத்துரோக வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் எனக்கு ஓராண்டு சிறைத் தண்டனை கொடுத்துத் தீர்ப்பு வழங்கியது, இந்த தீர்ப்பால், தனது மனு நிராகரிக்கப்பட்டுவிடுமோ என்று எண்ணி இரண்டு நாட்கள் தூங்காமல் இருந்தார், எனது மனு நிராகரிக்கப்படாமல் இருக்க நிறைய முயற்சிகளை அவர் செய்தார்’ என்றார்.

vaiko

முன்னதாக தேசத் துரோக  வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் வழங்கப்பட்டது. மேலும் வைகோ தாக்கல் செய்த மேல்முறையீடு காரணமாகச் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கின் விசாரணை  முடியும் வரை ஓராண்டு சிறைத் தண்டனையை விசாரணை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

வட்டி வருவாய் சூப்பர்… லாபமாக ரூ.8,758 கோடி அள்ளிய எச்.டி.எப்.சி. வங்கி..

2020 டிசம்பர் காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கி தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.8,758.3 கோடி ஈட்டியுள்ளது. நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான எச்.டி.எப்.சி. வங்கி...

கமல்ஹாசன் ஒரு கோழை – வைகைச் செல்வன் விளாசல்

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பாக காஞ்சிபுரம் காந்தி சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்செய்தியாளர்களிடம் பேசிய...

சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்! ஸ்தம்பித்தது சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி, ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள சுங்கச்சாவடியை கடக்க ஏராளமான வாகனங்கள் காத்திருக்கின்றன. பொங்கல்...

பிரதமர் மோடியை சந்திக்க நாளை டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி!

டெல்லியில் பிரதமர் மோடியை நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி சந்திக்கிறார். சந்திப்பின்போது காவிரி - குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டம், ஜி எஸ் டி நிலுவைத்...
Do NOT follow this link or you will be banned from the site!