Home விளையாட்டு இரட்டை சதம் வாய்ப்பை நழுவவிட்ட ரோகித்.. 324/1 என்ற வலுவான நிலையில் இந்தியா!!

இரட்டை சதம் வாய்ப்பை நழுவவிட்ட ரோகித்.. 324/1 என்ற வலுவான நிலையில் இந்தியா!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 176 ரன்களுக்கு ஆட்டம் இருந்து வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 324 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்து வலுவான நிலையில் உள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 176 ரன்களுக்கு ஆட்டம் இருந்து வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 324 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்து வலுவான நிலையில் உள்ளது.

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகபட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. விராட் கோலி முன்னமே தெரிவித்தபடி, நடுவரிசையில் களமிறங்கி கொண்டிருந்த ரோகித் சர்மா இன்றைய போட்டியில் துவக்க வீரராக களம் இறக்கப்பட்டார். 

rohit sharma

முதல் நாள் ஆட்டம் இந்திய அணிக்கு முழுமையாக சாதகமாக அமைந்தது அவர் ஆடிய ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார். முதல் நாளின் மூன்றாவது சேஷனில் மழையின் குறுக்கீடு இருந்ததால் ஆட்டம் தடைபட்டது. பின்னர் தொடர்ந்து மழை நீடித்ததால் முழுமையாக ஒத்திவைக்கப்பட்டது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 202 ரன்கள் எடுத்து விக்கெட் இழப்பின்றி வலுவாக இருந்தது.

இதனையடுத்து, இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் துவக்க வீரர்களான மயங்க் அகர்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் அதிரடியாக ஆடி பவுண்டரிகளை விளாசினார். இதனால், இந்திய அணிக்கு மளமளவென ரன் உயர்ந்தது. மயங்க் அகர்வால் சதத்தை பூர்த்தி செய்தார்.

ind vs sa

மறுமுனையில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 150 ரன்கள் கடந்து ஆடிக்கொண்டிருந்தார். இதனால் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. துரதிஷ்டவசமாக, 176 ரன்கள் இருக்கையில் மகாராஜாவின் பந்தில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் மறுமுனையில் மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடி 150 ரன்களை எட்டி வருகிறார்.

இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளையின் போது, இந்திய அணி 324 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை இழந்து வலுவான நிலையில் இருக்கிறது. புஜாரா மற்றும் மயங்க் அகர்வால்  இருவரும் களத்தில் இருந்தனர்.

-vicky

மாவட்ட செய்திகள்

Most Popular

“குப்பைக்கு வரி விதித்த குப்பை அரசு அதிமுக அரசு தான்” – அனல் பறக்கும் ஸ்டாலின் பிரச்சாரம்!

சொத்து வரியுடன் சேர்த்து குப்பையைச் சேகரிப்பதற்கும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்திருந்தார். அதன்படி வீடுகளுக்கு 10 ரூபாய்...

விளாத்திக்குளம் அருகே களைகட்டிய மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

தூத்துக்குடி விளாத்திக்குளம் அருகே கோவில் குமரெட்டியாபுரத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தையத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். விளாத்திக்குளம் அடுத்த கோவில்...

“உறங்கியவன் தொடையில் திரித்த வரை லாபம்; சந்தடி சாக்கில் உலை வைக்கும் மோடி-எடப்பாடி”

கல்பாக்கம் அணு உலைக்கு அருகாமையில் உள்ள 14க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளில் மத்திய - மாநில அரசுகளின் அரசு ஆணையின்படி, இனிமேல் பத்திரப் பதிவு மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்து...

“இதுதான் ஊழலை ஒழிக்கும் லட்சணமா?” – மக்கள் நீதி மய்யத்தின் ரூ.1 லட்சம் பரிசுப் பொருட்கள் பறிமுதல்!

தமிழகத்தில் தேர்தல் குறித்தான அறிவிப்பை நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டார். அதன்படி ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அறிவிப்பு வெளியான இரண்டு மணி நேரத்திற்குப்...
TopTamilNews