Home இந்தியா இரக்கப்பட்டு வாங்கிய மனைவி.. 'கம்முன்னு' இருந்த கணவருக்கு அடித்தது அதிர்ஷ்டம்!

இரக்கப்பட்டு வாங்கிய மனைவி.. ‘கம்முன்னு’ இருந்த கணவருக்கு அடித்தது அதிர்ஷ்டம்!

பாவமாக இருக்கு என்று கூறி லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். சரி மனைவி ஆசைப்படுகிறாள் என்று நினைத்து சிவனும் எதுவும் கூறவில்லை.

மனைவியின் ஆசையை நிறைவேற்றிய கணவருக்கு லாட்டரிக்கு ரூ 70 லட்சம் பரிசு  விழுந்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள செட்டிகுளங்கரையைச் சேர்ந்தவர் சிவன்.  இவருக்கு ஓமணா  என்ற மனைவி உள்ளார். ஓமணாவும்  சிவனும் சமீபத்தில் அங்குள்ள கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது கோயில் அருகில் ஒருவர் லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்தார். அவர் ஓமணாவிடம் அம்மா நான் இதயநோயாளி, நீங்கள் இந்த லாட்டரி சீட்டை வாங்கிக்கொண்டால் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார். ஆனால்  சிவனுக்கு இதில் விருப்பம் இல்லாததால் அவர் அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளார். அப்போது அவரது  மனைவி அவரிடம், பார்க்க பாவமாக இருக்கு என்று கூறி லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். சரி மனைவி ஆசைப்படுகிறாள் என்று நினைத்து சிவனும் எதுவும் கூறவில்லை.

ttn

இந்நிலையில் ஓமணா இரக்கப்பட்டு வாங்கிய அந்த லாட்டரிக்கு ரூ 70 லட்சம் பரிசு  விழுந்துள்ளது. இதுகுறித்து கூறியுள்ள சிவன், ‘நான் ஏழை கட்டிட தொழிலாளி. என் மனைவி விரும்பியதால் தான் லாட்டரி சீட்டு வாங்கினாள். தற்போது அதற்கு ரூ 70 லட்சம் பரிசு  விழுந்துள்ளது. எனக்கு பணத்தை வீண் செலவு செய்தால்  பிடிக்காது. தற்போது எங்களுக்கு கிடைத்துள்ள பணத்தில் வீட்டை பெரிதாக கட்டி கொள்ளவுள்ளேன். மேலும் கடன்களை அடைக்கவுள்ளேன்’ என்றார். 

மாவட்ட செய்திகள்

Most Popular

ஆன்லைனில் அள்ளுகிறது பட்டாசு வியாபாரம் – களை கட்டுகிறது தீபாவளியும், சிவகாசியும்..

வருகிற நவம்பர் மாதம் 14-ம் தேதி தீபாவளி வருகிறது.தீபாவளி என்றாலே புத்தாடையும், பட்டாசும்தான்…அடுத்தபடியாக பலகரம்…இதனையடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இடம் பிடித்துக் கொள்ளும். இதில் உற்றார், உறவினர்கள், நண்பர்கள், குழந்தைகளுடன் பாட்டாசு...

‘அனல் பறக்கும் பீகார் தேர்தல் களம்’ பிரச்சாரம் இன்றுடன் நிறைவு!

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கிடையே பீகார் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. 28ம் தேதி...

”இன்டர்நெட் ஸ்பீடு – இந்தியாவில் படு மோசம்” ”உலகளவில் 131வது இடத்தில் இந்தியா”

செல்போன் இணையதள வேகத்தில் 138 நாடுகளில் இந்தியா 131ஆவது இடத்தில் இருப்பது ஊக்லா நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இணையத்தில்...

பாஜகவில் இணைந்தார் ‘பிக் பாஸ்’ மோகன் வைத்யா

பிக் பாஸ் சீசன் 3 பங்கேற்ற மோகன் வைத்யா பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கி...
Do NOT follow this link or you will be banned from the site!