Home தமிழகம் 'இயற்கை உபாதை கழிக்க வேண்டும்'.. சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பியோடிய கைதி!

‘இயற்கை உபாதை கழிக்க வேண்டும்’.. சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பியோடிய கைதி!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்துள்ள செங்காடு என்னும் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், மீது பல வழக்குகள் இருக்கின்றன.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்துள்ள செங்காடு என்னும் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், மீது பல வழக்குகள் இருக்கின்றன. அப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கிறது. சமீபத்தில் மதுராந்தகத்தை அடுத்த அணைக்கட்டு பகுதியில் ஒரு கொலை நடந்தது. அந்த கொலையின் முக்கிய குற்றவாளியான இவர், நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்து பின்னர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 

ttn

இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு போலீசார் வெங்கடேசனை இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஆஜர் படுத்திய பின்னர், மீண்டும் வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப் படும் வழியில் வெங்கடேசன் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதனை நம்பிய போலீசார், அவரை வாகனத்திலிருந்து இறங்குவதற்கு சம்மதித்துள்ளனர். அப்போது, அங்கிருந்து கீழே இறங்கிய  வெங்கடேசன் வாலாஜா சுங்கச்சாவடி அரு8கே தப்பியோடியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.
 

மாவட்ட செய்திகள்

Most Popular

அலாஸ்கா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்!

வட அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கா அலாஸ்கா கடற்கரைப்...

சென்னையில் கனமழை: இருள் சூழ்ந்து காணப்படும் சாலைகள்!

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் அண்ணா சாலை, கிரீன்வேஸ் சாலை, வடபழனி,...

உச்சத்தை தொட்ட வெங்காய விலை : கோயம்பேட்டில் ஒரு கிலோ ரூ.110க்கு விற்பனை!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ. 100 முதல் 110 வரை விற்பனையாகிறது. ரூ. 80க்கு விற்கப்பட்ட ஒரு...

தமிழகத்தில் பரவலாக பலத்த மழை !

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து...
Do NOT follow this link or you will be banned from the site!