இயக்குநர்  ராஜூ முருகனுக்கு எதிராக செயல்படும் தேச விரோத கும்பல்!

தனது `குக்கூ’ படத்தின் மூலமாக வெகுஜன திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் ராஜூமுருகன், `ஜோக்கர்’ படத்தின் மூலமாக அரசியல்வாதிகளின், சமூகப்போராளிகளின் கவனத்தைக் கவர்ந்திருந்தார். அவரது அடுத்தப் படமான ஜீவா நடித்திருக்கும் `ஜிப்சி’  பட வேலைகள் முடிவுற்று ரிலீஸுக்கு தயாராக உள்ளது.  நாடோடிகளாக இடம் பெயர்ந்து வாழ்கிறவர்களின் சிரமங்களை எடுத்துரைக்கிற கதையாக இருக்கும் இந்த படத்திற்கு சென்சாரில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. 
இந்தப் படத்துக்கு சென்சாரால் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லி இருக்கிறார் எஸ்.வி.சேகர். தணிக்கையாளர்கள் பார்வையில்  ஜிப்சி, வன்முறையைத் தூண்டுகிற படமாக தெரிந்திருக்கிறது. மஞ்சளை அரைத்து விழுதாக வைத்திருந்தாலும் அவர்களுக்கு அது ` யெல்லோ பாஸ்பரஸ் ” தான் என்பதை அவருக்கே உரிய பாணியில் சொல்லி இருக்கிறார் சேகர்.

raju murugan

அந்தப் படம் ரிவைசிங் கமிட்டி வரை சென்று விட்டதாகவும் அதில் யோகி ஆதித்யநாத்தைப் போல ஒருவர் வருவதாகவும்,  ஆர்.எஸ்.எஸ்.கருத்துகளை கண்டித்து வசனங்கள் எழுதப்பட்டிருப்பதாகவும் அதனால் படம் வருமா என்பது சந்தேகம் என்பது போன்ற கருத்தினை பதிவு செய்திருக்கிறார்  எஸ்.வி.சேகர்.
அவரது நாடகங்களை விட்டுத் தள்ளுங்கள். பார்வையாளர்கள் கம்மி. ஆனால் சோ ராமசாமியின் நாடகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

gypsy

அவைகளில் இல்லாத விமர்சனங்களா? துக்ளக் படத்தில்  இந்திரா அம்மையாரை உருவகப்படுத்தி ஒரு நடிகை நடித்திருந்தாரே நினைவில்லையா சேகருக்கு? தற்கால பல படங்களிலும் பல போலிகளை தோலுரித்துக் காட்டிய கேரக்டர்களை தணிக்கை அனுமதிக்கவில்லையா? நாட்டு நலனுக்கு எதிராக செயல்படுகிற கும்பலுக்கு தணிக்கை குழுவினர் அடிமையாகி விடக்கூடாது. 
“ராஜு முருகன் சொன்னதைப் போல “ஒரு குரலை அடக்க நினைத்தால் ஓராயிரம் குரல் எழும்” “ஒரு அப்பாவியின் உயிரைப் பறித்தால் திருப்பி அடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?” என்கிற நிலை வராதா?

Most Popular

மரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல- ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

கேரள நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 28 பேர் ஆக அதிகரிப்பு

கேரளா: மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத்...

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்...

“சொப்னா வழியே சிறந்த வழி” -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும் பல கடத்தல்கள்..

கேரளா மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள தங்க ஊழல் பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில் , சொப்னா வழியில்,...