Home சினிமா இயக்குநர் கார்த்திக் நரேனை புகழ்ந்து தள்ளிய பிரியா பவானி சங்கர் 

இயக்குநர் கார்த்திக் நரேனை புகழ்ந்து தள்ளிய பிரியா பவானி சங்கர் 

பிரியா பவானி சங்கர் மாஃபியா படம் குறித்து அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சென்னை: பிரியா பவானி சங்கர் மாஃபியா படம் குறித்து அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சின்னதிரை நாயகியாக வலம் வந்து கொண்டு இருந்த பிரியா பவானி சங்கர் மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நுழைந்தார். மற்ற நடிகைகள் போல் இல்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் ‘துருவங்கள் பதினாறு’ பட இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் மாஃபியா படத்தில் நடிக்கிறார். 

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் ஹீரோவாக அருண் விஜய் நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படம் குறித்து பிரியா பவானி சங்கர் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘மாஃபியா படத்தில் எனது காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. மகிழ்ச்சியான, உற்சாகமான, மிக வேகமாக இந்த படப்பிடிப்பு நடந்தது. கார்த்திக் நரேனின் 3 பவுண்ட் எடை கொண்ட விசேஷ மூளையின் திறன் பற்றி நாங்கள் இன்னும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறோம். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

That’s a wrap of ‘Mafia’ for me? It was a fun cheerful and a super fast quick shoot. We are still wondering about the capacity of this 3 pound super special brain of @karthicknaren_m @arunvijayno1 You are a surprise package of kindness dedication perseverance talent positivity and an unexpected friend I made at work? It never felt like we were shooting at a stretch for a month and I’m gonna miss everyone in my routine now. @rtheprotagonist @gokul_benoy @ashokstylist27 Renu and the whole bunch of wonderful asst directors u all made it more special and memorable? Mafia will always remain close to my heart for so many obvious reasons. Love you all ❤️ PS: inspite of all the fun it’s still a serious movie ? #Mafia

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

விடா முயற்சி, திறமை, நேர்மறை எண்ணம் எல்லாம் மொத்தம் கொண்ட ஒரு ஆச்சரியமான நபர் அருண்விஜய். எதிர்பாராமல் எனக்கு கிடைத்த நண்பர். ஒரு மாதம் விடாமல் படப்பிடிப்பு நடைபெற்றது எங்களுக்குத் தெரியவேயில்லை.  குழுவில் இருக்கும் அனைவரும் இந்தப் படப்பிடிப்பை மறக்க முடியாததாக மாற்றினார்கள். இப்படிப் பல காரணங்களுக்காக மாஃபியா எப்போதும் என் இதயத்துக்கு நெருக்கமான படமாக இருக்கும்’ என்று கூறியுள்ளார். 

மாவட்ட செய்திகள்

Most Popular

“என் அறிக்கை அல்ல ; ஆனால் அதில் வந்த செய்தி உண்மை தான்” : நடிகர் ரஜினிகாந்த்

உடல்நலத்தை கருத்தில் கொண்டு தனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்குத் தெரிவிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த்...

‘சென்னையில் மழை பாதிப்பு’ புகார் எண்கள் அறிவிப்பு!

மழை பாதிப்பு தொடர்பாக மக்கள் தகவல் தெரிவிக்க புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய...

அரண்மனையில் வேலை: துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் ரூ 18.5 லட்சம்

இங்கிலாந்து ராணி எலிசபெத் வாழும் அரண்மனை ‘வின்ஸ்டர் காஸ்ட்டில்’ என்பதாகும். மிகப் பிரமாண்டாமன இந்த அரண்மனையில் துப்புறவுப் பணியாளர்கள் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். இதில் சேர விரும்பும் பணியாளர்களுக்கு ஆங்கிலம்...

குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் காலமானார்!

கொரோனா பாதிப்பால் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் காலமானார். உலகையே உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, சாதாரண மக்கள் முதல்...
Do NOT follow this link or you will be banned from the site!