இப்ராஹிமின் நேர்மை

ஒரு ஊரில் இப்ராஹிம் என்ற ஞானி வசிந்து வந்தார். வாழ்க்கை அதன் போக்கில் அனுபவித்து வாழ்ந்து வந்த இப்ராஹிம் ஒரு நாள் நடந்துச் சென்றுக் கொண்டிருந்த போது, அருகே இருந்த தோட்டத்திலிருந்து, ‘தோட்டத்தில் வேலை செய்வதற்கு இத்தனை தாமதமாகவா வருவது?’ குரல் வந்தது. ‘சீக்கிரம் வா… அந்த மரங்களுக்கு எல்லாம் நீர் பாய்ச்சு’ என்று அதிகாரத் தொனியில் ஒலித்தது குரல்.

ஒரு ஊரில் இப்ராஹிம் என்ற ஞானி வசிந்து வந்தார். வாழ்க்கை அதன் போக்கில் அனுபவித்து வாழ்ந்து வந்த இப்ராஹிம் ஒரு நாள் நடந்துச் சென்றுக் கொண்டிருந்த போது, அருகே இருந்த தோட்டத்திலிருந்து, ‘தோட்டத்தில் வேலை செய்வதற்கு இத்தனை தாமதமாகவா வருவது?’ குரல் வந்தது. ‘சீக்கிரம் வா… அந்த மரங்களுக்கு எல்லாம் நீர் பாய்ச்சு’ என்று அதிகாரத் தொனியில் ஒலித்தது குரல்.

garden

அந்த தோட்டத்தின் உரிமையாளருக்கு, மாந்தோப்பை பரமாரிப்பதற்கு பணியாளர் தேவைப்பட்டதால், வேலைக்கு ஆள் வேண்டுமென்று சொல்லி வைத்திருந்தார். இப்ராஹிம் அந்தப் பக்கமாக சென்றதும், தோட்ட வேலைக்குத் தான் வந்திருக்கிறார் என்று தவறுதலாக நினைத்து விட்டார்.
ஆனால், இப்ராஹிம் எதுவும் மறுப்பு சொல்லாமல், ‘இது இறைவனின் விருப்பம் போல’ என்று நினைத்துக் கொண்டு மரங்களுக்கு நீர் பாய்ச்ச ஆரம்பித்தார். 
சிறிது காலம் சென்றதும், அந்த தோட்டத்தின் உரிமையாளரைப் பார்ப்பதற்காக அவரது நண்பர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு மாம்பழம் பறித்து தரும்படி பணக்காரர் உத்தரவிட, இப்ராகிமும் பறித்துக் கொடுத்தார். அவற்றை சாப்பிட்ட நண்பர்கள் மாம்பழத்தின் புளிப்பு சுவை தாங்காமல் முகம் சுளித்தனர்.
இவ்வளவு நாள் பணி செய்தும் எந்த மரத்தில் பழம் இனிக்கும் என தெரியாதா? என கோபித்தார் பணக்காரர். 

imbrahim

ஐயா! காவல் பணியைத் தான் என்னிடம் ஒப்படைத்தீர்கள். பழங்களை சாப்பிட்டு ருசியை அறிய அனுமதி அளிக்கவில்லை என்றார் இப்ராஹிம்.
இப்ராஹிமின் நேர்மையைக் கண்ட பணக்காரர் வியப்பில் ஆழ்ந்து, இப்ராஹிமிடம் மன்னிப்பு கேட்டார்.

Most Popular

கந்தசஷ்டி அவமதிப்பு : பரிகாரமாக தமிழகம் முழுவதும் இன்று பூஜை நடத்தும் பாஜக!

கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலை சேர்ந்தவர்கள் கந்த சஷ்டி கவசத்தை பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்டனர். அவர்களின் இந்த கொடுஞ்செயலை கண்டித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக...

ஆக்டிவ் கேஸஸில் முதல் 10 மாநிலங்கள் இவைதாம் – இந்தியாவில் கொரோனா நிலவரம்

கொரோனா நோய்த் தொற்றில் உலகளவில் மூன்றாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. என்றாலும் மற்ற நாடுகளை விட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கும் செய்தியாகும். இறப்பு விகிதம் குறைவாக...

லட்சக்கணக்கில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – உலகளவில் கொரோனா நிலவரம்

சென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்றவையே கொரோனா பரவலைத் தடுக்க கடும் போராட்டத்தில் உள்ளன.  இன்றைய தேதி...

விஜயவாடா தீ விபத்தில் 11 பேர் பலி: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல இடங்கள் கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் விஜயவாடா பகுதியில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றும் கொரோனா வார்டாக மாற்றம்...