இன்றைய இலவசம்… நாளைய லாபம்… ஜெயிச்சு காட்டிய முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட நிகர லாபமாக ரூ.990 கோடி அள்ளியுள்ளது. சென்ற நிதியாண்டின் இதே காலாண்டில் ஜியோ ரூ.680 கோடி மட்டுமே லாபம் பார்த்து இருந்தது.

மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறை சேவையில் காலடி வைத்த பிறகு நம் நாட்டு தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. இலவச அழைப்பு, இன்டர்நெட் என பல அதிரடி சலுகைகளால் குறுகிய காலத்திலேயே கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை ஜியோ தன் பக்கம் ஈர்த்தது. ஜியோவின் போட்டியை சமாளிக்க முடியாமல் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தை மூடின. அதேசமயம் ஜியோவின் போட்டியை சமாளிக்க ஏர்டெல், வோடாபோன் ஐடியா போன்ற நிறுவனங்களும் கட்டண குறைப்பு போன்ற நடவடிக்கையில் இறங்கின.

முகேஷ் அம்பானி

ஜியோ நிறுவனம் தொடக்கத்தில் ஒரு பைசா கூட முகேஷ் அம்பானிக்கு லாபமாக சம்பாதித்து கொடுக்கவில்லை. அது பற்றி எல்லாம் முகேஷ் அம்பானி கவலைபட்டதாக தெரியவில்லை. வாடிக்கையாளர்களை அதிகரிப்பதில்தான் ஜியோ அதிக கவனம் செலுத்த தொடங்கியது. ஒரு கட்டத்தில் போதும் இனி வந்த வேலையை பார்ப்போம் என்ற முடிவு செய்த ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு சேவைக்கு கட்டணம் விதிக்க தொடங்கியது. அது முதல் ஜியோ நிறுவனம் மெல்ல மெல்ல லாப பாதைக்கு திரும்பியது. 

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.990 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 45 சதவீதத்துக்கும் அதிகமாகும். 2018 செப்டம்பர் காலாண்டில் ஜியோவின் நிகர லாபம் ரூ.681 கோடியாக இருந்தது. 2019 செப்டம்பர் காலாண்டில் ஜியோவின் செயல்பாட்டு வருவாய் சுமார் 34 சதவீதம் அதிகரித்து ரூ.12,354 கோடியாக உயர்ந்துள்ளது.
 

Most Popular

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுதியிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாஸ்குமார்(19), கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த...

கேரளாவில் இன்று 1,298 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில்...

இ-பாஸ் நடைமுறை எதற்கு?- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் சற்று குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் லட்சக்கணக்கானோர் சொந்த...

பாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம்...