Home ஆன்மிகம் இன்று சுபிட்சம் தரும் ‘கூர்ம காயத்ரி’ மந்திரத்தைச் சொல்லுங்க!

இன்று சுபிட்சம் தரும் ‘கூர்ம காயத்ரி’ மந்திரத்தைச் சொல்லுங்க!

ஆமை வடிவம் கொண்டு உலக நன்மைக்காக திருமால், கூர்ம அவதாரம் எடுத்த தினம் தான் கூர்ம ஜெயந்தி

இன்று  சுபிட்சம் தரும்  ‘கூர்ம காயத்ரி’ மந்திரத்தைச் சொல்லுங்க!

திருமால் எடுத்த பத்து அவதாரங்களில் இரண்டாவது அவதாரம் கூர்ம அவதாரம். ஆனி மாதத்தில் தேய்பிறையில் வரும் துவாதசி திதியில் தேவர்களை காக்க திருமால் கூர்ம அவதாரம் எடுத்ததாக புராணங்கள் சொல்கின்றன. இன்று (29.06.2019) கூர்ம ஜெயந்தியை  அனுஷ்டிக்கின்றோம்.
கூர்மம் என்றால் ஆமை. ஆமை வடிவம் கொண்டு உலக நன்மைக்காக திருமால், கூர்ம அவதாரம் எடுத்த தினம் தான் கூர்ம ஜெயந்தி. தசாவதாரங்களில், கூர்ம அவதாரம் மட்டும் தான் குறிப்பிட்டு யாரையும் அழிப்பதற்காக எடுக்கப்படாமல் அனைவரும் நல்லமுறையில் வாழ வேண்டும் என எடுக்கப்பட்ட மகத்தான அவதாரம். அதனால், இந்த நல்ல நாளில் எல்லா வளங்களையும் அளிக்கும் வல்லமை கொண்ட திருமாலை வணங்கி வழிபடுபவர்களின் வாழ்வில் என்றென்றும் சுபிட்சம் கிட்டும்.

 

kurma

ஒரு முறை கோபத்திற்கு பேர் போன துர்வாச முனிவரின் சாபத்தால் பதவியை இழந்தான்  தேவேந்திரன். தேவேந்திரனின் செல்வாக்கு பறிபோனதை அறிந்த அசுரர்கள் தேவர்களுடன் போரிட ஆரம்பித்தனர். போரில், தேவர்கள் அசுரர்களை கொல்ல, அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் சிவபெருமானிடம் பெற்ற சஞ்சீவினி மந்திரத்தால் இறந்த அசுரர்களை உயிர் பெறச் செய்தார். இதனால் சோர்ந்த போன தேவர்கள், இதற்கு தீர்வு அளிக்குமாறு விஷ்ணுவை வேண்டினார்கள். 
திருமால் மந்திரமலையை கொண்டு பாற்கடலை கடைய அதில் இருந்து கிடைக்கும் அமிர்தத்தை உண்டால் மட்டுமே நீங்கள் போரில் வெற்றி பெற இயலும் என்றார் விஷ்ணு.

kurma

பாற்கடலை கடைய தேவர்களின் பலம் மட்டும் போதுமானதாக இருக்காது என்று எண்ணி, இந்திரன் அசுரர்களுடன் சமாதானம் பேச சென்று அவர்களை சம்மதிக்க வைத்தார். திருமால் முன்னிலை நின்று மந்திரமலையை மத்தாகவும், வாசுகி பாம்பினை கயிராகவும் கொண்டு கடைய பருமன் தாங்காமல் மலையானது புரண்டு விழவும் தேவர்களும், அசுரர்களும் இது பயனற்ற செயல் என்று கருதினார்கள்.
தேவர்களின் இன்னல்களை போக்கவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவும் திருமால் மிகப்பெரிய கூர்மமாக (ஆமை வடிவம்) அவதாரம் எடுத்து பாற்கடலுக்குள் நுழைந்து மந்திரமலையை தாங்கிக் கொண்டார். அதன் பின் தேவர்களும், அசுரர்களும் மலையை கடைய அதில் இருந்து காமதேனு, கற்பக விருட்சம், வெண் குதிரை, அப்சர கன்னிகள், ஐராவதம், திருமகள் இறுதியாக அமிர்தத்தை ஏந்திய தன்வந்திரியும் வெளிப்பட்டார். தேவர்களும், பூவுலகமும் நன்மை பெற வேண்டும் என எண்ணி கூர்ம மூர்த்தியாக அவதாரம் கொண்டார் திருமால்.

kurma

இந்த நாளில், தாய், தந்தையரை வணங்கி ஆசி பெறுவது மிகுந்த புண்ணியத்தை அளிக்கும். நமது முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்தவர்களை கண்டு அவர்களிடம் ஆசி பெறவும் இன்று உகந்த நாள்.

கூர்ம காயத்ரி மந்திரம்:
” ஓம் தராதராய வித்மஹ
பாச ஹஸ்தாய தீமஹி
தன்னோ கூர்ம ப்ரசோதயாத்” 
எனும் கூர்ம காயத்ரி மந்திரத்தைச் சொல்லி திருமாலின் அருள் பெற்று செல்வச் செழிப்புடன் சுபிட்சமாய் வாழ்க்கையை வாழுங்கள்!

இன்று  சுபிட்சம் தரும்  ‘கூர்ம காயத்ரி’ மந்திரத்தைச் சொல்லுங்க!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

மழையால் வந்த சோதனை… டிராவை நோக்கி நகரும் டெஸ்ட் பைனல் – ரசிகர்கள் வேதனை!

50 ஓவர் உலகக்கோப்பைக்கு இணையாகப் பேசப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சப்பையாக முடிவது உள்ளபடியே கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி முதல் முறையாக டெஸ்ட் போட்டிக்கென்று...

மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொன்று, கணவர் தப்பியோட்டம்!

கோவை கோவையில் செல்போனில் அடிக்கடி ஆண் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த மனைவியை, கணவர் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனைவியின் உடலை தந்தூரி சிக்கன் போல சுட்ட கணவர் -கதற வைக்கும் காரணம்

மனைவியின் கொன்று அவரின் உடலை தந்தூரி சிக்கன் போல சுட்ட கணவரை போலீஸ் கைது செய்தது பாகிஸ்தானில் உள்ள கஹ்ரோர்...

பெற்றோர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் தொற்றுக்கு ஆளாகும் குழந்தைகள்

ஒரு வயது முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகள் கடந்த 20 நாட்களில் மட்டும்258 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளதால் அதிர்ந்து போயிருக்கிறது காஞ்சிபுரம்.
- Advertisment -
TopTamilNews