இன்று எம பயம் நீக்கும் நிர்ஜலா ஏகாதசி விரதம்

இன்று வருகின்ற ஏகாதசியை நிர்ஜலா ஏகாதசி என்றழைக்கிறார்கள். வருடம் முழுவதும் வருகின்ற ஏகாதசிகளில் இதுவே உயர்ந்த ஏகாதசி. இன்றைய தினத்தின் மாலைப் பொழுது முழுவதும் யார்  தண்ணீரையும் அருந்தாமல் நிர்ஜலமாக உபவாஸம் விதிப்படி இருக்கிறார்களோ, அவர்கள் அடுத்து வரும் ஒரு வருஷத்துக்கான ஏகாதசிகளில் உபவாஸம் இருந்த பலன்களைப் பெறுவார்கள். 

இன்று வருகின்ற ஏகாதசியை நிர்ஜலா ஏகாதசி என்றழைக்கிறார்கள். வருடம் முழுவதும் வருகின்ற ஏகாதசிகளில் இதுவே உயர்ந்த ஏகாதசி. இன்றைய தினத்தின் மாலைப் பொழுது முழுவதும் யார்  தண்ணீரையும் அருந்தாமல் நிர்ஜலமாக உபவாஸம் விதிப்படி இருக்கிறார்களோ, அவர்கள் அடுத்து வரும் ஒரு வருஷத்துக்கான ஏகாதசிகளில் உபவாஸம் இருந்த பலன்களைப் பெறுவார்கள். 

god

கலியுகம் பிறந்ததும், தர்மபுத்திரன் கலியுகத்தின் கொடுமையைப் பார்த்தார். அவர் பார்த்த இடங்களில் எல்லாம் களவும் சண்டையுமாக இருந்தது. தர்மமே சாய்ந்து விட்டது. பிறர் மனைவியை அபகரித்தல், வீண் சண்டை செய்தல், கொலை, கொள்ளை என்று எல்லாவற்றையும் கண்டார்.  இதையெல்லாம் பார்த்து, இதில் நாமும் வாசம் செய்ய நேர்ந்து விட்ட தலைவிதியை நினைத்து கலங்கி நின்றார்.  இப்படிவரும் பாபத்தை அகற்ற வழியும் சுலபமாக இல்லையே எனவும் வருந்தினார்.
அப்போது வியாசரை சந்தித்து, மக்கள் தங்கள் வாழ்க்கையிலிருந்து மேலே கரையேறுவதற்கான வழியைக் கூற வேண்டுமென பிரார்த்தனைச் செய்தார். 
‘எல்லா பாவங்களையும் அகற்றுவதற்கு ஏகாதசி ஒன்றுதான் சுலபமான வழி. இதைத் தவிர வேறு வழி இல்லை’ என்றார் வியாசர். அடுத்த நிமிடமே தர்மபுத்திரர், ‘தனது ராஜ்ஜியத்தில் எல்லோரும் ஏகாதசி விரதமிருக்க வேண்டும்” என்று ஆணையிட்டார்.  அனைவரும் பயந்து உபவாசம் இருக்க முயற்சித்தனர்.

god

தர்மரின் ஆணையைக் கேட்டு அதிகம் வருந்தியது பீமன் தான். ஏனெனில் பீமனோ வயிறுதாரி. எவ்வளவு உண்டாலும் திருப்திதியடையாதவன்.  இந்த பிரச்சனையோடு, எப்படி ஒவ்வொரு ஏகாதசியும் உபவாசமிருக்க முடியும் என்று கலங்கி வியாசரிடம் முறையிட்டான்.
வியாசரும், ‘ஆனி மாதம் வருகின்ற சுக்ல ஏகாதசியன்று ஒரு நாள் உபவாசம் இருப்பாயாக’ என்றார்.  பீமனும் இவ்வாறு வருடத்துக்கு ஒரு முறை உபவாசம் இருந்து பகவானை பூஜித்தான்.  இப்படி பீமன் இதைக் கடைப்பிடித்து வந்ததால், இந்த ஏகாதசியை பீம ஏகாதசி என்றும் சொல்கிறார்கள். 
இந்த ஏகாதசியை அனுஷ்டித்தால் 24 ஏகாதசி விரதங்களையும் அனுஷ்டித்த பலன் கிட்டும் என பீமனுக்கு வேத வியாசர் கூறியுள்ளார்.  பீமபூஜை என்பதே ஆழ்மனதில் இறைவனை இருத்தி பூஜை செய்வது தானே.  இந்தநாளில் உள பூர்வமாக பீமனையும் இணைத்து வழிபாடுசெய்தால் வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிடைக்கும் .  வருடம்முழுவதும் உள்ள ஏகாதசி விரதபலன்களும் கிடைக்கும். எம பயமும் நம்மை நெருங்காது.

Most Popular

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் வந்தே பாரத் திட்டம் தொடரும்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு பெருந்தொற்றாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வந்த நிலையில்,...

பாடகி பிரியங்கா குரலில் டாப் தமிழ் நியூஸ் வழங்கும் கந்த சஷ்டி கவசம் : 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை!

தமிழ் கடவுளாக போற்றப்படும் அற்புத சக்திவாய்ந்த முருகப்பெருமான் உலகம் முழுவதும் உள்ள பக்தர்களை தனது கருணை பார்வையால் ஆட்கொண்டு வருகிறார். கார்த்திகேயரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். ஆலயம் பலவற்றில் அழகுற...

“பக்கவாதத்தால் படுத்த தாயை ,பக்காவா பிளான் போட்டு கொன்ற மகன்”-அவரின் பிளானை கேட்டா அதிர்ச்சியடைவிங்க..

உத்தரபிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள கானா காது கிராமத்தில் இக்பால் என்ற நபர் தன்னுடைய 80 வயதான பக்கவாதம் பாதிக்கப்பட்ட தாயோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அவரால் அவரின் தாயை பராமரிப்பது அவருக்கு...

‘என் கணவனை காப்பற்றுங்கள்’.. சாத்தான்குள வழக்கில் கைதான காவலர் பால்துரையின் மனைவி தர்ணா!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவலர்களை கைது செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்...