Home இந்தியா இன்டர்நெட் இல்லை... ஏடிஎம் இல்லை... விண்ணைத் தொடும் விலை உயர்வு... கையில் பணமில்லாமல் அல்லாடும் குவாஹத்தி மக்கள்!

இன்டர்நெட் இல்லை… ஏடிஎம் இல்லை… விண்ணைத் தொடும் விலை உயர்வு… கையில் பணமில்லாமல் அல்லாடும் குவாஹத்தி மக்கள்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அஸ்ஸாம், திரிபுராவில் போராட்டங்கள் வெடித்தது. இதனால், தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டது. ஏ.டி.எம்-களில் பணம் நிரப்பப்படவில்லை. இதனால், உணவுப் பொருட்களை வாங்க கூட பணமில்லாமல் அஸ்ஸாம் மக்கள் அவதியுற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அஸ்ஸாம், திரிபுராவில் போராட்டங்கள் வெடித்தது. இதனால், தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டது. ஏ.டி.எம்-களில் பணம் நிரப்பப்படவில்லை. இதனால், உணவுப் பொருட்களை வாங்க கூட பணமில்லாமல் அஸ்ஸாம் மக்கள் அவதியுற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 9 மணிக்கு ஊரடங்கு ஏழு மணி நேரத்துக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டது. மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள இந்த தடை தளர்த்தப்பட்டது. 

people

இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் ஸ்வைப் செய்து பொருட்களை வாங்க முடியாது. கையில் பணமில்லாததால் பலரும் ஏ.டி.எம்-க்கு சென்றுள்ளனர். ஏ.டி.எம்-களில் பணம் நிரப்பப்படாததால் எந்த ஏ.டி.எம்-ல் பணம் இருக்கும் என்று மக்கள் தேடி அலைந்துள்ளனர். பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் இல்லை. கடைகளில், ஒரு கிலோ வெங்காயம் ரூ.250க்கு விற்பனையாகி உள்ளது. உருளைக்கிழங்கு ரூ.60க்கு மேல் விற்பனையாகி உள்ளது. கோழி ஒரு கிலோ ரூ.500க்கும், 10 ரூபாய்க்கு விற்ற ஒரு கட்டு கீரை ரூ.60க்கும் விற்பனையாகி உள்ளது. ஆனால், அவ்வளவு விலை கொடுக்க தயாராக இருந்தும் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். 
அரசு குறைவான நேரத்துக்கு மட்டுமே ஊரடங்கை தளர்த்தியுள்ளது. அதற்குள்ளாக பொருட்களை விற்க வேண்டும் என்பதால் குறைவான அளவிலேயே பொருட்களை வாங்கிவந்தோம். மேலும், அஸ்ஸாமில் நிலவும் பிரச்னை காரணமாக விளை பொருட்கள் சந்தைகளுக்கு வரவில்லை. அவை வேறு மாநிலங்களுக்கு திருப்பிவிடப்பட்டுவிட்டன. அரசு இதை சரி செய்தால் மட்டுமே நிலைமை சீரடையும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 
மக்களின் பணத் தட்டுப்பாட்டைப் போக்க ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணிகள் தீவிரமாக்கப்பட்டன. மேலும், நடமாடும் ஏ.டி.எம் மையங்களை எஸ்.பி.ஐ இயக்கியது. இன்றும் அங்கு நிலைமை சீரடையவில்லை என்று செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

மாவட்ட செய்திகள்

Most Popular

“சென்னையில் வெள்ளப்பெருக்கு” – தமிழக அரசுக்கு மத்திய நீர்வளத்துறை கடிதம்!

செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளவை எட்டவுள்ள பாதுகாப்பு கருதி உபரிநீர் திறக்கப்படவுள்ளது. இநண்பகல் 12மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட உள்ளதால் அடையாற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது....

பூ ஒன்று புயலானது – ஸ்டாலினுக்கு எதிராக கனிமொழி அமைதி புரட்சி

‘பூ ஒன்று புயலானது’. இது பழைய தெலுங்கு டப்பிங் பட டைட்டில் மட்டுமல்ல. திமுகவின் இன்றைய நிலையும் இதுதான். ‘’பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. எவ்வளவு காலத்திற்குத்தான் அடங்கிக் கிடப்பது?’’...

வடசென்னையில் 16 செ.மீ மழை பதிவு – சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னையில் இருந்து 350 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருக்கும் நிவர் புயல் நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை 145 கி.மீ வேகத்தில் காற்று...

வேல் யாத்திரைக்கு கூட்டம் திரட்ட துணை நடிகைகளின் குத்தாட்டமா?

முருகக் கடவுளை முன்வைத்து கடந்த 20 நாட்களுக்கு மேல் தமிழக பாஜக வேல் யாத்திரையை நடத்தி வருகிறது.திருத்தணியில் தொடங்கிய இந்த யாத்திரை திருச்செந்தூரில் முடிப்பதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!