இனி திமுகவினர் நோன்பு கஞ்சி குடிக்க வராதீங்க… ஆ.ராசாவுக்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு..!

முஸ்லீம்களின் வாழ்வியலுக்கு உள்ளே வர வேண்டாம். வந்தால் உமக்குத் தான் அவமானம். இஸ்லாம் பற்றிப் பேச வேண்டாம்

திமுக எம்.பி., ஆ.ராசா இனி முஸ்லீம்களுக்கு வாழ்த்து சொல்ல வேண்டாம் என அம்மதத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விருதுநகர் இளைஞரணி பயிற்சி பட்டறையில் பேசிய திமுக எம்.பி., ஆ.ராசா, ‘’இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் நெறி இருக்கிறது. போதனைகள் இருக்கிறது. நபிகள் நாயகத்திற்கும், ஏசுவில் பிறப்பிற்கும் வரலாறுகள் இருக்கின்றன. ஆனால், இந்துக்களுக்கு நெறிமுறைகள் இல்லை. கற்பனைக்கதைகளை வைத்துக் கொண்டு நம்ப முடியாத நிகழ்வை கூறி தீபாவளி கொண்டாடுகிறார்கள். ஆகையால், ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்குப் வாழ்த்து சொல்ல நியாயம் இருக்கிறது. ஆனால், தீபாவளிக்கு எப்படி வாழ்த்து சொல்ல முடியும்? ஆகவே தான் தீபாவளி பண்டிகைக்கு திமுக வாழ்த்து தெரிவிப்பது இல்லை’’ எனப்பேசி இருந்தார். a raja

இது இந்துக்கள் மனதை புண்படுத்தியது. அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. சிறுபான்மை மதத்தினர் தம்மோடு இருப்பதாக இறுமாப்போடு பேசிய ஆ.ராசாவே எதிர்பாராத விதமாக இஸ்லாமியர்கள் அவருக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 

சமூகவலைதளத்தில் இது குறித்து பதிவிட்டு வரும் இஸ்லாமியர்கள், ‘’இனி முஸ்லீம்களுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டாம். கஞ்சி குடிக்க வேண்டாம். முஸ்லீம்களின் வாழ்வியலுக்கு உள்ளே வர வேண்டாம். வந்தால் உமக்குத் தான் அவமானம். இஸ்லாம் பற்றிப் பேச வேண்டாம்’’ என்று தெரிவித்துள்ளார்.A Raja

மற்றொருவர், ‘’இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் என ஒற்றுமையாக வசித்து வருவதை தங்களது அரசியல் சுயநலத்துக்காக எங்களுக்குள் வன்முறையை தூண்ட நினைக்கும் திமுக இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒரு மதத்தை உயர்த்தியும், மற்றொரு மதத்தை தாழ்த்தியும் பேசி தரக்குறைவான அரசியலை மதத்தை வைத்து திமுக நடத்தி வருவது பெரும் கண்டனத்திற்குரியது. மக்கள் பிரச்னைகளை பற்றி பேசி அரசியல் செய்யுங்கள். மக்களுக்குள் பிரச்னைகளை ஏற்படுத்தி அரசியல் செய்யவேண்டாம்’’ எனத்தெரிவித்துள்ளனர். 

எதிர்பாராத இடத்திலிருந்து கல்லெறி விழத் தொடங்கி இருப்பதால் கலக்கத்தில் இருக்கிறது திமுக தரப்பு. 

 

Most Popular

“நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டியா?”- தங்கையை காதலித்த வாலிபரை வீடு புகுந்து கொலை செய்த அண்ணன்

"நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டியா?" என கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தங்கையின் காதலனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் வாலிபர். இந்த சோக சம்பவம் தேவகோட்டையில் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம்,...

விமானப்படையின் உதவியை நாடினார் கேரள முதல்வர்; என்ன காரணம்?

தென்மேற்கு பருவமழையின் காரணமாக கேரள மாநிலத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி, பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. இன்று காலை திடீரென...

மதுரை உலைப்பட்டியில் தொல்லியல் ஆய்வு வேண்டும்! – சீமான் கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உலைப்பட்டியில் தொல்லியல் பொருள்கள் கிடைத்துள்ளதால் அங்கு விரிவான ஆய்வு மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

சாதித்த இ.பி.எஸ் அரசு: 3 ஆண்டுகளாக தேசிய விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக தமிழக பொருளாதார வளர்ச்சி விகிதம்!

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருப்பது தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது என்பதை காட்டும் வகையில் உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள்...