இனி ஆவின் நெய்க்கு அக்மார்க் முத்திரை கிடையாதாம்..!?

அரிசி, பருப்பு, நெய்  என சுமார் 225 பொருட்களுக்கு அக்மார்க் முத்திரை கொடுக்கப்பட்டுள்ளது. 

விவசாய பண்ணைகளில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களுக்குத் தான், கலப்படம் இல்லாத உணவு பொருட்கள் என்று அக்மார்க் முத்திரை கொடுக்கப்படும். அதன்படி அரிசி, பருப்பு, நெய்  என சுமார் 225 பொருட்களுக்கு அக்மார்க் முத்திரை கொடுக்கப்பட்டுள்ளது. 

aavin

இந்நிலையில் ஆவின், ஹாட்ஸன் உள்ளிட்ட 33 நிறுவனங்கள் இனி அக்மார்க் முத்திரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது அக்மார்க் தர சான்றிதழ், ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். ஆனால் ஆவின், ஹாட்ஸன் உள்ளிட்ட 33 நிறுவனங்கள் இன்னும் சான்றிதழை புதுப்பிக்காததால், அக்மார்க் முத்திரையைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வேளாண்துறையின் கீழ் செயல்படும் சந்தை படுத்துதல் மற்றும் கண்காணிப்பு இயக்ககம் எச்சரித்துள்ளது.  இது தவிர 37 அரிசி வகைகள் உள்ளிட்ட 66 பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

aavin

ஆவின் நெய்க்கான அக்மார்க் தரச் சான்றிதழ் இன்னும் காலாவதியாகவில்லை என்று சான்றிதழை புதுப்பிக்க 2023 வரை அவகாசம் உள்ளதாக ஆவின் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 
 

Most Popular

ஆந்திர அரசு மருத்துவமனையில் நோயாளியின் சடலத்தை சாப்பிடும் நாய்கள்… சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

தெலங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர அரசு மருத்துவமனை நிர்வாகம் தொடர்பாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில்: இது மனதை உலுக்கும்!...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்!

இன்றைய ராசிபலன்கள் 12-08-2020 (புதன்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 வரையில் மாலை 4.45 முதல் 5.45 வரையில் ராகு காலம் :  காலை 12.00 மணி முதல் 1.30 வரையில் எமகண்டம் : காலை 7.30...

கிருஷ்ணர் இன்று ஜெயிலில் பிறந்தார், உங்களுக்கு பெயில் அல்லது ஜெயில் எது வேண்டும்? எஸ்.ஏ.பாப்டே நகை்சுவை

நீதிமன்றங்கள் எப்போதும் மிகவும் வழக்குகளால் மிகவும் சீரியஸாக இருக்கும். அதேசமயம் சில நேரங்களில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறும். அதற்கு உதாரணமாக நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு சம்பவம் நடந்தது. கொலை வழக்கில்...

எனக்கு என்னவோ அவங்க 2 பேரும் மேலயும் சந்தேகம் இருக்கு… சச்சின், கெலாட் சேர்ந்தது குறித்து மாயாவதி

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக ராஜஸ்தான் அரசியல்...
Do NOT follow this link or you will be banned from the site!