Home லைப்ஸ்டைல் இந்த 5 யோகாசனங்களை செஞ்சா ஒரே மாசத்துல தொப்பையைக் குறைச்சிடும்!

இந்த 5 யோகாசனங்களை செஞ்சா ஒரே மாசத்துல தொப்பையைக் குறைச்சிடும்!

உடல் பருமன் பிரச்சினைகளால மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிற எண்ணிக்கை இப்போதெல்லாம் அதிகமாகி கொண்டே போகுது. சாப்பாட்டுல கட்டுப்பாடில்லாம, தேவையில்லாத பழக்கத்தாலும், அர்த்த ஜாமத்துல தூங்கப் போறதுனாலேயும் தொப்பைங்கிற விரும்பாத விஷயம் எல்லாருக்குமே கிடைச்சிருக்கு. இந்த யோகாசனங்களை எல்லாம் முறையா செஞ்சு வந்தால், ஒரே மாசத்துல எப்படிப்பட்ட தொப்பையா இருந்தாலும், குறைச்சு ஸ்லிம் பியூட்டியா ஈஸியா மாறிடலாம்.

உடல் பருமன் பிரச்சினைகளால மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிற எண்ணிக்கை இப்போதெல்லாம் அதிகமாகி கொண்டே போகுது. சாப்பாட்டுல கட்டுப்பாடில்லாம, தேவையில்லாத பழக்கத்தாலும், அர்த்த ஜாமத்துல தூங்கப் போறதுனாலேயும் தொப்பைங்கிற விரும்பாத விஷயம் எல்லாருக்குமே கிடைச்சிருக்கு. இந்த யோகாசனங்களை எல்லாம் முறையா செஞ்சு வந்தால், ஒரே மாசத்துல எப்படிப்பட்ட தொப்பையா இருந்தாலும், குறைச்சு ஸ்லிம் பியூட்டியா ஈஸியா மாறிடலாம்.

நம்மளோட முன்னோர்கள் கடைபிடிச்சுக்கிட்டு வந்த ஒவ்வொரு முறைக்கும் பல விதமான அர்த்தங்கள் இருந்தது. அவங்க செஞ்ச எல்லா வகையான முறைகளும் இயற்கையோட இணைஞ்சிருந்துச்சு. உடல் எடை பிரச்சினை பற்றி எல்லாம் அவங்க யோசிக்கவே இல்லை. எடைகூடுறது வேற, தொப்பை வளர்ப்பது வேற என்கிற தெளிவு அவங்களுக்கு இருந்துச்சு.

yoga

புஜங்காசனம்

பாம்பு படமெடுக்கிறது மாதிரியான தோற்றத்தை இந்த பயிற்சி முறை தரவல்லது. உடலோட தசைகளை இலகுவாக்கி உடல் எடையை கச்சிதமாக வைத்து கொண்டு, தொப்பையை விரைவில் குறைக்க செய்யும். அதோடு, ரத்த ஓட்டத்தை சீராக வைத்து எந்த வித பிரச்சினைகளும் இன்றி ஆரோக்கியமான உடல் நலத்தை தரும்.
முதலில் குப்புற படுத்து கொண்டு, இரண்டு கைகளையும் தோள்பட்டைக்கு நேராக வைத்து கொள்ள வேண்டும். பிறகு தலை மற்றும் மார்பு பகுதியையும் சேர்த்து மேலே தூக்கி மூச்சை மெல்ல இழுத்து விடவும். அதன் பின், இரு கால்களையும் மேலே தூக்கி மூச்சை இழுத்து விடவும். இந்த பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால், தொப்பையில் உள்ள கொழுப்புகள் குறைந்து எளிதில் ஸ்லிம்மாக ஆகிவிடலாம்.

yoga

உஸ்ட்ராசனம்

உஸ்ட்ராசனம் நம்ம உடம்போட முழு நிலையையும் சீராக வெச்சு, அதிக நலனைத் தரும். இந்த பயிற்சியை தினமும் செய்து வந்தா, நம்ம வயிற்றில் இருக்கும் கொழுப்பு எல்லாமே ரொம்ப சீக்கிரத்துல கரைய ஆரம்பிச்சிருக்கும். அப்புறம் என்ன… நீங்க ஸ்லிம் பியூட்டி தான்.கால்கள் உள்ளே மடங்குவது மாதிரி முழங்காலில் உட்கார்ந்துக் கொண்டு, மெதுவாக உடலை எழ செய்து பின்னங்கால்களை கைகளால் பிடித்து கொள்ள வேண்டும். இதே  நிலையில் உடலை நன்றாக வளைத்து வெச்சிருக்க வேண்டும். இந்த நிலையில் மெல்லமா மூச்சை இழுத்து வெளியே விடணும். இதைத் தொடர்ந்து செய்யணும்.

yoga

கும்பகாசனம்

கும்பகர்ணன் மாதிரி நொறுக்குத் தீனியைத் தானே சாப்பிட்டு தொப்பையை வளர்த்து வந்தீங்க… இந்த ஆசனம் செய்யும் போதெல்லாம் அதை நினைச்சு, கொஞ்சம் கஷ்டப்பட்டு தொடர்ச்சியா செஞ்சுக்கிட்டு வாங்க. அப்புறம் ரெண்டே வாரத்துல உங்களோட தொப்பை சைஸ் என்னன்னு செக் பண்ணி பாருங்க… கணிசமா குறைஞ்சிருக்கும். தொப்பையை குறைக்கிறதுல இந்த ஆசனம் ரொம்ப முக்கியமானது. இதோட ப்ளஸ் என்னன்னா, வெறும் தொப்பையைக் குறைப்பதோட மட்டுமல்லாம, தசைகளுக்கும் அதிக வலிமையை இந்த ஆசனம் தரும். அதோட, வயிற்றில் இருக்கும் தசைகளும் உறுதி பெறும். கிட்டத்தட்ட ‘புல் அப்ஸ்’ மாதிரியான நிலையில் தான் இந்த ஆசனத்தை நீங்க செய்யணும்.

எத்தனை முறை குப்புறப் படுத்துக் கொண்டு, உருளைக் கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டிருப்போம். அதை நினைச்சுக்கிட்டு, இப்போ குப்புற படுத்துக்கொண்டு தோல் பட்டையை மேலே தூக்கி நிறுத்திக் கொள்ளவும். அடுத்து கைகளை தோல் பட்டைக்கு நேராக நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் கால்கள் பாதி முட்டி போடுவது போன்று இருக்க வேண்டும் அடுத்து உங்களின் உடலை மெல்ல மேலே எழும்ப செய்யவும். இந்த நிலையில் 10 நொடிகளுக்கு மேல் இருக்கலாம். பின் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடலாம்.

yoga

தனுராசனம்

தனுராசனம் செய்றதால உடலோட முழு செயல்பாடும் சீராக நடைபெறும். தொப்பையை முழுக்க குறைக்க இந்த தனுராசனம் பெரிதும் உதவும். ‘தனு’ ன்னு சொன்னா ‘வில்’ ன்னு அர்த்தம் உண்டு. தனுஷு ராசி நேயர்களே… சொல்றோமில்லையா… அது மாதிரி. இந்த ஆசனத்தை செய்யறதுக்கு உடம்பை வில் மாதிரி வளைக்க வேண்டும்.

முதலில் குப்பற படுத்து கொண்டு, இரண்டு கணுக்காலை, கைகளால் பிடித்து கொள்ளவும். அடுத்து, மார்பு பகுதியை மேல் நோக்கி தூக்குமாறு செய்ய வேண்டும். இந்த நிலையில் மெல்லமாக மூச்சை இழுத்து வெளியில் விடவும். இப்படி, வில்லை போன்று உடலை வளைத்து தொடர்ந்து செய்து வந்தால், தொப்பையை விரைவில் குறைத்து விடலாம்.

yoga

விருக்சாசனம்

‘விருக்ஷம்’ ன்னா ‘மரம்’னு பொருள். மரம் மாதிரி நின்று கொண்டு இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். இந்த ஆசன முறை வயிற்று தசைகளுக்கு அதிக வலிவை தந்து, தொப்பையற்ற வயிறா மாத்திடும். இந்த ஆசன நிலையில் 10 முதல் 30 விநாடிகள் வரை இருக்கலாம். தொடர்ச்சியா இதை செய்து வந்தா, அப்புறம் உங்களுக்கு ஃப்ளாட் பெல்லி தான்…

மாவட்ட செய்திகள்

Most Popular

நவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறப்பு.. முதல்ல சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி.. கர்நாடக அரசு தகவல்

கர்நாடகாவில் நவம்பர் 17ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதலில் சுகாதார பணியாளர்களுக்கு வழங்க முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும்...

ரூ.862 கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில் தொடக்கம்…

புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் வரும் டிசம்பரில் தொடங்க உள்ளதாகவும், 2022 அக்டோபருக்குள் கட்டுமான பணிகள் நிறைவடைந்து விடும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நாடாளுமன்றம்...

கை கொடுத்த சிக்கன நடவடிக்கை…. ஏசியன் பெயிண்ட் லாபம் ரூ.852 கோடி….

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.851.90 கோடி ஈட்டியுள்ளது. அலங்கார வர்த்தக துறையை சேர்ந்த ஏசியன்...
Do NOT follow this link or you will be banned from the site!