Home ஜோதிடம் இந்த ராசிக்கெல்லாம் பண வரவு நிச்சயமா இருக்கும்?

இந்த ராசிக்கெல்லாம் பண வரவு நிச்சயமா இருக்கும்?

அற்புதமான நாள். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். மாற்றம் ஏற்படுத்தக் கூடிய மற்றும் முக்கியமானவர்களுடன் நட்பை மேம்படுத்த சமூக நிகழ்ச்சிகள் சரியான வாய்ப்பாக இருக்கும். 

இந்த ராசிக்கெல்லாம் பண வரவு நிச்சயமா இருக்கும்?

13.09.2019 (வெள்ளிக்கிழமை)
நல்ல நேரம்
காலை 9.15 மணி முதல் 10.15 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம்
காலை 10.30 மணி முதல் 12 வரை
எமகண்டம்
பிற்பகல் 03 மணி முதல் 4.30 வரை
சந்திராஷ்டமம்
ஆயில்யம், மகம்
பரிகாரம்
வெல்லம்
இன்று  பௌர்ணமி
மேஷம்
ரிலாக்ஸ் செய்ய வாய்ப்பு கிடைக்கும் நாள். பண லாபத்தைத் தரும் அறிவுப்பூர்வமான புதிய சிந்தனைகள் ஏற்படும். குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவழித்து நல்ல குணங்களை கற்றுக் கொடுங்கள். தங்களின் பொறுப்புகளை அவர்கள் உணரட்டும். இன்று அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 2
ரிஷபம் 
ஆரோக்கியத்தைப் பொருத்த வரை மிக நல்ல நாள். உற்சாகமான மன நிலை உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும். நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இனிமையான மற்றும் அற்புதமான மாலை நேரத்துக்காக விருந்தினர்கள் உங்கள் வீட்டில் கூடுவார்கள். 
அதிர்ஷ்ட எண்: 1
மிதுனம் 
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். அறிவு தாகத்துக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். இன்று உங்கள் திறமை நிறைய பாராட்டுகளைப் பெறும். எதிர்பாராத வெகுமதிகளைக் கொண்டு வரும். இன்று மனதை சோதித்துப் பார்ப்பீர்கள்.  
அதிர்ஷ்ட எண்: 8
கடகம் 
உங்கள் நகைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. உங்கள் நோயை குணமாக்க அதைப் பயன்படுத்துங்கள். ஆசிகளும் நல்ல அதிர்ஷ்டங்களும் வரவுள்ளதால் விருப்பங்கள் பூர்த்தியாகும். முந்தைய நாட்களின் கடின உழைப்புகளுக்குப் பலன்கள் கிடைக்கும். மாலையில் நண்பர்களுடன் இருப்பது ஆனந்தமயமானது. 
அதிர்ஷ்ட எண்: 3
சிம்மம் 
மன ரீதியான பயம் பொறுமையை இழக்கச் செய்யும். நல்லவற்றின் பக்கமான பார்வையும் சிந்தனையும் அவற்றைத் தள்ளி வைக்கும். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். மிக முன்கூட்டியே ஏற்பாடு செய்த பயணத் திட்டம், குடும்பத்தில் உடல்நலக் குறைபாடு காரணமாக தள்ளிப் போகும். 
அதிர்ஷ்ட எண்: 1
கன்னி 
உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விஷயங்களைச் செய்தால் பலன் கிடைக்கக் கூடிய நாள். இன்று முதலீட்டை சேர்த்து, நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம். நண்பர்கள் கூடும் இடங்களில் உங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களை பிரபலமாக்கும். இன்று சர்ச்சையான பிரச்சினைகளை எழுப்புவதைத் தவிர்த்திடுங்கள். உறவினரால் இன்று உங்களிடையே வாக்குவாதம் ஏற்படலாம். 
அதிர்ஷ்ட எண்: 9
துலாம் 
உடல் திறனை பராமரிக்க விளையாட்டில் சிறிது நேரம் செலவிட வாய்ப்புள்ளது. உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது.  ஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள்.  புதியவற்றைக் கற்றுக் கொள்ளும் உங்கள் ஆர்வம் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 2
விருச்சிகம் 
அற்புதமான நாள். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். மாற்றம் ஏற்படுத்தக் கூடிய மற்றும் முக்கியமானவர்களுடன் நட்பை மேம்படுத்த சமூக நிகழ்ச்சிகள் சரியான வாய்ப்பாக இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 4
தனுசு 
 சிலருக்கு குடும்பத்தில் புதிய வரவு கொண்டாட்டம் மற்றும் பார்ட்டிக்கான நேரமாக அமையும். உங்கள் வாழ்வில் காதல் பூக்கும். வேலையில் இந்த நாள் உங்கள் நாளாகும்.  உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும். இன்று உங்கள் திருமண வாழ்க்கை எத்தனை இனிமையானது என்று உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 1
மகரம் 
உங்களுக்கான செயல்களை செய்ய மற்றவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள். மற்ற்றவர்கள் விரும்புவதைப் போல சிந்தியுங்கள். அது உங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தரும். உங்கள் நண்பர்களின் உதவியால் நிதிப் பிரச்சினை தீர்ந்து விடும். அதிகம் பேசுபவராகவோ உணர்ச்சிவயப்படவோ செய்யாதீர்கள். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்தாவிட்டால் உங்கள் நற்பெயரை சீக்கிரம் கெடுத்துக் கொள்ளக் கூடும். தொடர்பு கொள்ளும் முறைதான் இன்றைக்கு உங்களின் முக்கியமான பலம். 
அதிர்ஷ்ட எண்: 1
கும்பம் 
உங்களுக்கு அதிக சக்தி இருக்கும். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். உங்களுக்கு நெருக்கமான ஒருவர் அனுமானிக்க முடியாத மனநிலையில் இருப்பார். 
அதிர்ஷ்ட எண்: 8
மீனம் 
குடும்பப் பிரச்சினைகளை மனைவியுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சில முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உங்களுக்கு புதிய பண லாபத்தைக் கொண்டு வரும். உறவினர்களுடன் உறவுகளையும் பந்தங்களையும் புதுப்பித்துக் கொள்ளும் நாள்.  முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். இன்று உங்கள் துணையுடன் மிக அன்பாகவும் ரொமான்டிக்காகவும் பேசி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 5

இந்த ராசிக்கெல்லாம் பண வரவு நிச்சயமா இருக்கும்?
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

10 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் பல ஆயிரம் கலைஞர் தொலைக்காட்சி பெட்டிகள்

ஒரு சமுதாய நலக்கூடம் இருந்தும் அதை அப்பகுதியினர் பயன்படுத்தவே முடியாத நிலை இருக்கிறது. அதில் பல்லாயிரக்கணக்கான அரசு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்தும் அதுவும் யாருக்கும் பிரயோஜனம் இன்றி...

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது குண்டர் சட்டம் போடுங்கள் : தமிழக பாஜக வலியறுத்தல்!

இந்து மத கடவுள்களையும் பிரதமரையும் அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜகவினர் வலியுறுத்தினர். கன்னியாகுமரியில்...

நிலச்சரிவில் சிக்கி தமிழக வீரர் மரணம்: பணியின் போது நேர்ந்த விபரீதம்!

அசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா, அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தென்மேற்கு...

10,12ம் வகுப்புக்கான ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: முழு விவரம் உள்ளே!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவியது. இதனால் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட தேர்வுகளும் மாநில வாரியாக நடத்தப்படும் பொதுத் தேர்வுகளும் ரத்து...
- Advertisment -
TopTamilNews