இந்தி நஹி மாலும்டா, எங்களை விட்டுடுங்கடா!

“நாங்க உமி கொண்டு வர்றோ, நீங்க அரிசி எடுத்துகிட்டு வாங்க, ரெண்டு பேரும் சேர்ந்து ஊதி ஊதி திம்போம்” என்பது எந்த ஊர் நியாயம்? நம்மவர்கள் இந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழி கற்றுக்கொள்வதை காட்டிலும், இந்திகாரர்கள் ஆங்கிலம் என்ற ஒற்றை மொழியை கற்றுக்கொள்வதுதானே சுலபமான வழி?

“நாங்க‌ புடிச்ச இந்தி முயலுக்கு மூணே கால்” என வடநாட்டவர்கள் இதுநாள்வரை உணர்வுரீதியாக நம்மீது தொடுத்துவந்த‌ இந்திவெறி, இப்போது உயிர் பலி வாங்குமோ என்று அச்சம் கொள்ளுமளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. கடந்த மே மாதம் 10ஆம் தேதி, மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயிலும், மறு வழியில் ஓடிக்கொண்டிருந்த செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயிலும் திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடி ஸ்டேஷனுக்கு அருகே ஒரே தண்டவாளத்தில் எதிரெதிராக வந்துகொண்டிருந்தன. கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் பணியில் இருந்த தீப் சிங் மீனா என்ற வட இந்திய அதிகாரி இந்தியில் சொன்ன தகவலை, ஜெயக்குமார் என்ற மற்றோரு ஊழியர் தவறாக புரிந்துகொண்டதே இந்த பிரச்னைக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்தது.

Railways

நம்ம கேள்வி என்னன்னா? தீப் சிங் மீனாவுக்கு தென்கோடிபகுதியான கள்ளிக்குடியில்தான் பணிமாற்றம் செய்யப்படவேண்டுமா? உரிய நேரத்தில் சிக்னல் கோளாறு கண்டுபிடிக்கப்படாமல் போனால், விபத்து நிகழ்ந்து ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பின்னர் வருந்தி என்ன பயன்? இவ்வளவு வெறிகொண்டு இந்தியை திணிக்க வேண்டுமா?

Southern Railway HQ

அண்ணன் எப்படா சாவான், திண்ணை எப்படா காலியாகும் என காத்திருந்த‌ தென்னக ரயில்வே, ‘இனிமேல் த‌மிழக ரயில் நிலையங்களில் பணியாற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்கள், செக்சன் கன்ட்ரோலர்கள் ஆகியோர் கோட்டக் கட்டுப்பாட்டு அலுவலகத்துடன் ஆங்கிலம் அல்லது இந்தியில்தான் தொடர்பு கொள்ளவேண்டும்’ என்று தென்னக ரயில்வே கட்டளை இட்டிருக்கிறது. ரோமாபுரியில் இருக்கும்போது ரோமனாக இருக்கவேண்டும் என்ற அடிப்படை விஷயம்கூட ஏன் ரயில்வேக்கு புரிவதில்லை. தமிழ்நாட்டில் வேலையில் இருக்கும் இந்தி அதிகாரிக்கு தமிழ் சரியாக வராது, சரி. ஏன் ஆங்கிலத்தை மட்டும் கட்டாயமாக்கக்கூடாது?  ரயில்வே வேலைக்கு தேர்வாகிற இந்தி தெரியாத தமிழரோ, கன்னடரோ, தெலுங்கரோ, ஒரே நேரத்தில் இந்தி, ஆங்கிலம் என இருமொழிகளை கற்றுத் தேர்வதைக்காட்டிலும், ஆங்கிலம் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்தால் பிரச்னை தீர்ந்த்ததல்லவா?

Stop Hindi Imposition

“எங்க இந்திப் பசங்களுக்கு புதுசா ஒரு மொழியை கத்துக்கொடுப்பதில் பிரச்னை இருக்கிறது, அவிங்களுக்கு இந்தியே ஒழுங்கா தெரியாது, ஆகையால் அவர்களுக்கு ஓரளவு தெரிந்த இந்தியையே நீங்களும் கற்றுக்கொள்ளுங்களேன்” என்று மற்ற மாநிலத்தவர்களை மிரட்டுவதைக் காட்டிலும், அவர்களை எப்படியாவது ஏ ஃபார் ஆப்பிள், பி ஃபார் பால் கற்றுக்கொள்ள சொன்னால் என்ன? “நாங்க உமி கொண்டு வர்றோ, நீங்க அரிசி எடுத்துகிட்டு வாங்க, ரெண்டு பேரும் சேர்ந்து ஊதி ஊதி திம்போம்” என்பது எந்த ஊர் நியாயம்? நம்மவர்கள் இந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழி கற்றுக்கொள்வதை காட்டிலும், இந்திகாரர்கள் ஆங்கிலம் என்ற ஒற்றை மொழியை கற்றுக்கொள்வதுதானே சுலபமான வழி?

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....