Home தொழில்நுட்பம் இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் களமிறங்க உள்ள ஓப்போ நிறுவனம்

இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் களமிறங்க உள்ள ஓப்போ நிறுவனம்

ஓப்போ நிறுவனம் கூடிய விரைவில் ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

பெய்ஜிங்: ஓப்போ நிறுவனம் கூடிய விரைவில் ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது எனலாம். இந்த நிலையில், மற்றொரு சீன நிறுவனமும் இந்த களத்தில் இறங்க திட்டமிட்டுள்ளது. ஓப்போ நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் டிவி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுதொடர்பாக வெளியாகவில்லை. ஆனால் 2020-ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலகட்டத்தில் முதல் ஓப்போ ஸ்மார்ட் டிவி மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ttn

ஓப்போவின் ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் சியோமி, ஒன்பிளஸ், மோட்டோரோலா மற்றும் நோக்கியா டிவி போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சியோமி தவிர மற்ற நிறுவனங்கள் அனைத்தும் ஸ்மார்ட் டிவி சந்தையில் புதிதாக களமிறங்கி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்திகள்

Most Popular

முன்பகை காரணமாக திமுக பிரமுகர் வெட்டிக்கொலை

முன்பகை காரணமாக திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சின்னப்பன் என்ற அருண்குமார். இவர்...

ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் அணி அசத்தல் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டின் 40வது ஆட்டத்தில் , ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ்...

விரைவில் கட்சி அப்டேட்… ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்யும் முறை அறிமுகம்

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களுடனான சந்திப்பின்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து,...

கூட்டணியை மாற்றும் ராமதாஸ்? அதிமுக அரசை சாடியதால் சர்ச்சை

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்காக ஆயத்தமாகி வருகின்றன. ஆளும் கட்சியான அதிமுகவில் நீடித்து வந்த முதல்வர் வேட்பாளர் பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு...
Do NOT follow this link or you will be banned from the site!