இந்திய கிரிக்கெட் வீரர்களையும் வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர்களையும் நெறிப்படுத்த பிசிசிஐ புதிய குழு ஒன்றை அமைத்து தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை இந்தியா முழுவதும் செய்து வருகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர்களையும் வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர்களையும் நெறிப்படுத்த பிசிசிஐ புதிய குழு ஒன்றை அமைத்து தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை இந்தியா முழுவதும் செய்து வருகிறது.
கடந்த சில வருடங்களாக இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் வீரர்கள் ஊக்க மருந்து உட்கொள்வதும், போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபடுவது குறித்தும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
கடந்த மாதம், தமிழகத்தில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் தொடரில் சூதாட்டம் நடைபெற்றதாக பிசிசிஐக்கு தகவல் கிடைத்து, அதுகுறித்து விசாரணைகள் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் இதுபோன்ற செயல்கள் மறைமுகமாக நடைபெற்று வருவதாகவும் பிசிசிஐக்கு ஆயிரக்கணக்கில் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. மேலும் சில இளம் வீரர்கள் நன்றாக ஆடுவதற்காக ஊக்க மருந்துகளை உட்கொண்டு வருவதாகவும் புகார்கள் எழுந்திருக்கும் நிலையில், இவற்றை கட்டுப்படுத்த பிசிசிஐ நிர்வாகம் தற்போது புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அதாவது ஊக்க மருந்து உட்கொள்வது மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடுவது ஆகியவற்றை கண்டறியவும் விசாரிக்கவும் புதிய குழு ஒன்றை பிசிசிஐ நியமித்துள்ளது. இவர்கள் இந்தியா முழுவதும் இருக்கும் கிரிக்கெட் சங்கத்திற்கும் உறுப்பினர்கள் சங்கத்திற்கும் சென்று உறியவர்கள் மீது விசாரணையும் நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம். இவர்களை தொடர்புகொள்ள ஹெல்ப்லைன் சேவையும் பிசிசிஐ அமைத்துள்ளது.
இதுகுறித்த விழிப்புணர்வு போர்டுகள் ஒவ்வொரு கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் சங்க அலுவலகத்திலும் கட்டாயம் வைக்கப்படும் எனவும் பிசிசிஐ நிர்வாகம் குறிப்பிட்டு இருந்தது.
இந்த ஹெல்ப் லைனை பயன்படுத்தி யார் ஊக்க மருந்தை உட்கொள்கிறார்கள் அல்லது முறைகேடான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை மற்றவர்கள் அதிகாரிகளுக்கும் அல்லது பிசிசிஐ அலுவலகத்திற்கும் நேரடியாக தெரிவிக்கலாம். இதன் மூலம் வரும் காலங்களில் கிரிக்கெட் வீரர்களை சீரான வழியில் நெறிமுறைப்படுத்தலாம். மேலும் தற்போது இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் ஊக்கமருந்து குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட இருப்பதாகவும் பிசிசிஐ குறிப்பிட்டது.
-vicky