Home விளையாட்டு கிரிக்கெட் இந்தியா – நியூசிலாந்து முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை வெல்லிங்டனில் தொடங்குகிறது

இந்தியா – நியூசிலாந்து முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை வெல்லிங்டனில் தொடங்குகிறது

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது.

வெல்லிங்டன்: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரின் ஐந்து போட்டிகளையும் வென்று நியூசிலாந்து அணியை இந்தியா துவம்சம் செய்து தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி, டி20 தொடரில் பெற்ற தோல்விக்கு இந்திய அணியை நியூசிலாந்து பழி தீர்த்தது. இந்த நிலையில், இரண்டு டெஸ்ட் போட்டிகள் தொடரில் இவ்விரு அணிகளும் மோதவிருக்கின்றன.

அந்த வகையில், முதல் டெஸ்ட் போட்டி நாளை வெல்லிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 04: 00 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்த டெஸ்ட் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். முன்னதாக நியூசிலாந்து லெவன் மற்றும் இந்திய அணிகள் பங்கேற்ற 3 நாள் பயிற்சி போட்டி சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் ஹனுமா விகாரி சதமடித்து அசத்தினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“ஓபிஎஸ் – ஈபிஎஸ் சசிகலா விடுதலையை கொண்டாடுகிறார்கள்” – டிடிவி தினகரன்

மருத்துவர்களின் அறிவுரைப்படி சசிகலாவை தமிழகம் அழைத்து வருவோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சொத்துகுவிப்பு வழக்கில் சிறையிலிருந்து சசிகலா...

“மாற்றத்தின் சேவகனாக உங்கள் முன் வருவேன்” : அர்ஜுன மூர்த்தியின் புதிய தகவல்!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் நுழைவார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். இதையடுத்து கட்சியின் நிர்வாகிகளாக அர்ஜுன மூர்த்தி மற்றும் தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டு, அதற்கான...

ஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் : ஓபிஎஸ் பேச்சு!

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், ஏழேழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு கடமை பட்டிருப்பதாக தெரிவித்தார். சென்னை மெரினா கடற்கரையில் ஃபீனிக்ஸ்...

சொந்த மகள்களை சொம்பால் அடித்து… சூலத்தால் வயிற்றை கிழித்து… ஆந்திராவை நடுங்க வைத்த நரபலி !

ஆந்திர மாநிலம் சித்தூரில் சொந்த மகள்களை நரபலி கொடுத்த சம்பவம் இந்தியாவேயே அதிர செய்திருக்கிறது. இதை அரங்கேற்றியது ஒரு கல்லூரியின் துணை முதல்வராக இருக்கும் தந்தையும், பேராசிரியராக இருக்கும் தாயும்...
Do NOT follow this link or you will be banned from the site!