Home விளையாட்டு இந்தியா.. ஆஸ்திரேலியா போட்டியை மழை பாதிக்குமா? வெல்லப் போவது யார்?

இந்தியா.. ஆஸ்திரேலியா போட்டியை மழை பாதிக்குமா? வெல்லப் போவது யார்?

உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் போட்டி தொடங்கி ஒரு வாரம் காத்திருந்து, தென்னாப்பிரிக்காவை இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவுடனான இன்றைய போட்டி அத்தனை எளிதாக இருக்காது என்றே கிரிக்கெட் நிபுணர்கள் கணிக்கிறார்கள். 

இந்தியா.. ஆஸ்திரேலியா போட்டியை மழை பாதிக்குமா? வெல்லப் போவது யார்?

உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் போட்டி தொடங்கி ஒரு வாரம் காத்திருந்து, தென்னாப்பிரிக்காவை இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவுடனான இன்றைய போட்டி அத்தனை எளிதாக இருக்காது என்றே கிரிக்கெட் நிபுணர்கள் கணிக்கிறார்கள். 

ind vs aus

டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் அந்த அணிக்கு திரும்பி வந்திருப்பது, 5 விக்கெட்டுகளை எடுத்த ஸ்டார்க் என ஆஸ்திரேலியாவின் முந்தைய போட்டிகளை பார்க்கும்போது,ஆஸ்திரேலியா கூடுதல் பலமான அணியாகவே தோன்றுகிறது. 

இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை ஓவல் மைதானத்தில் விளையாடியுள்ள போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்த அணிகள் இரண்டு வென்றுள்ளன.வங்கதேசத்திற்கு எதிராக நியூசிலாந்து விளையாடிபோது, இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்த நியூசிலாந்து திரில் வெற்றிபெற்றுள்ளது.

இதுவரை விளையாடியுள்ள இந்த ஆறு இன்னிங்ஸ்களிலும் மூன்று முறை 300 ரன்களை தாண்டியிருக்கின்றன. இந்த மைதானத்தில் அதிக ரன்கள் எடுக்கப்பட்டிருந்தாலும்,பந்து வீச்சுக்கும் இந்த மைதானம் உதவுகிறது. வானிலை மந்தமாக இருந்தால், ரிவர்ஸ் ஸ்விங் வீச்சு கைக்கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆனால், இன்றைய போட்டி கிட்டத்தட்ட சமநிலை போட்டியாக இருக்கும். உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா சிறந்த வெற்றிப் பதிவுகளைச் செய்திருக்கிறது. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களான ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோர் விராட் கோலிக்கும், ரோஹித் ஷர்மாவுக்கும் பந்து வீசத் தயங்குவார்கள். மிட்ச்செல்லின்  பந்துவீச்சு இன்றைய போட்டியில்  மிக முக்கியமானதாக இருக்கும். ஆனால், விராட் கோலி நிலைத்து நின்று ஆடினால், ஆஸ்திரேலியாவுக்கு பெரும் சவாலாக அமைந்துவிடும் என்றும் நிபுணர்கள் கணிக்கிறார்கள். 

ind vs aus

இன்றைய போட்டியில் இரு அணிகளின் வீரர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளைப் பொறுத்தே எந்த அணி வெற்றி பெறும் என்பது தெரியும். இன்னொரு பக்கம் இங்கிலாந்தில், இந்திய ரசிகர்கள் இன்றைய போட்டிக்கு மழையால் இடையூறு ஏற்படக்கூடாது என்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

வெள்ளிக்கிழமை இரவு வரையில் லண்டனில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. தென்னாப்பிரிக்காவை வென்ற இந்திய அணி, வெற்றி களிப்போடு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான விளையாட லண்டனை அடைந்த பொழுதே, இந்திய அணியை மழை வரவேற்றது. மழையால், வெள்ளியன்று இந்திய வீரர்களால் மைதானத்தில் பயிற்சி எடுக்க முடியவில்லை. இந்திய கிரிக்கெட் அணியினர் பயிற்சி எடுப்பதை மழை சீர்குலைத்தது.நேற்றும் மழை பெய்ததால், இந்திய அணிக்கு பயிற்சி எடுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

india

முதலாவது போட்டியில் இந்தியா வென்றுள்ளதை போலவே,ஆப்கானிஸ்தானை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்திலும்,மேற்கிந்திய தீவு அணியை 15 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.மேற்கிந்திய தீவுகளின் அணியுடனான போட்டியின் போது நடுவர்களின் தீர்ப்பும் விவாதத்திற்குள்ளானது. 

மழையும், நடுவர்களின் பாரபட்சமான தீர்ப்புகளும் நமக்கு குறுக்கே வராமல் இருந்தால்,இன்றைய போட்டி கிரிக்கெட் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் சரியான போட்டியாக இருக்கும்!

இந்தியா.. ஆஸ்திரேலியா போட்டியை மழை பாதிக்குமா? வெல்லப் போவது யார்?
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 6 பேர் பலி!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைக்காக ஆம்புலன்சில் காத்திருந்தவர்களில் 6 பேர் உயிரிழந்தார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மொத்தமுள்ள...

ரொம்ப டேஞ்சரஸ்..ஆவி புடிச்சுகிட்டு இருக்கேன்…நடிகர் செண்ட்ராயன்

நடிகர் செண்ட்ராயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர்...

விடுதலைப்புலிகளை வெளிப்படையாக ஆதரித்து பல எதிர்வினைகளும், எதிர்ப்புகளும் வந்தபோதும்… சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ’’தமிழ்த்தேசிய சிந்தனையாளரும், சமூகநீதி போராளியுமான பெருமதிப்பிற்குரிய அருட்தந்தை ஜான் சுரேசு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மனக்கவலையும் அடைந்தேன். அவரது...
- Advertisment -
TopTamilNews