இந்தியாவை வெளுத்துவாங்கிய விண்டீஸ்.. அபார வெற்றி!

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் விண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் விண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.

டி20 தொடர் முடிவுற்ற பிறகு இன்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற விண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு பந்து வீச்சை தேர்வு செய்தார். 

இதனையடுத்து களமிறங்கிய துவக்க வீரர் கேஎல் ராகுல் 6 ரன்களிலும், அடுத்து வந்த கேப்டன் கோலி 4 ரன்களிலும் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர். பின்னர் ஓரளவிற்கு நிதானித்து ஆடிவந்த ரோஹித் சர்மாவும் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. 

 

இந்திய அணிக்கு பின்னர் ஜோடி சேர்ந்த இளம் வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் ஆட்டமிழக்காமல் ஆடி வந்தனர். துரதிஸ்டவசமாக ஷ்ரேயாஸ் 70 ரன்களிலும், ரிஷப் பண்ட் 71 ரன்களிலும் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 287 ரன்கள் சேர்த்தது. 

அடுத்து களமிறங்கிய விண்டீஸ் அணியின் துவக்க வீரர் ஆம்ரேஷ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சாய் ஹோப் மற்றும் இளம் வீரர் ஹெட்மையர் இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். 

அதிரடியாக ஆடிய ஹெட்மையர் சதம் அடித்தார். இவர் 7 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் விளாசி, 139 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இவருக்கு பக்கபலமாக மறுமுனையில் இருந்த சாய் ஹோப் நிதானித்து ஆடி சதம் அடித்தார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 102 ரன்கள் குவித்தார். 

இறுதியில் விண்டீஸ் அணி 47.5 ஓவர்களில் 291 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Most Popular

சகோதரிகள் இடையே சேனல் மாற்றுவதில் பிரச்னை… கண்டித்த தாய்… வேதனையில் உயிரை மாய்த்த மகள்

சகோதரிகள் இடையே டிவி சேனல் மாற்றுவதில் தகராறு ஏற்பட்டதால் தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மூத்த மகள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியை சேர்ந்தவர் செபஸ்டின். இவர்...

‘எந்த கட்சி அரியணை ஏறும் என்பதை மக்களே முடிவு செய்வார்கள்’ முதல்வர் பழனிசாமி காட்டம்

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மும்மொழி கொள்கையை புதிய கல்விக் கொள்கை அறிவுறுத்துவதால், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது சமூக...

“தமிழுடனும், தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர்” : கமல் ஹாசன் புகழஞ்சலி!

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி எப்போதும் ஒரு அரசியல்வாதியாக, மக்கள் பிரதிநிதியாக, ஒரு கட்சியின் தலைவராக தன்னுடைய நிலைப்பாட்டில் எப்போதும் உறுதியுடன் இருந்தவர். தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தவர்....

சண்டையால் பிரிந்து சென்றார்… குழந்தையை கொடுக்க மறுப்பு… காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன்

கருத்து வேறுபாடால் பிரிந்து சென்ற காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள அக்கரைதத்தப்பள்ளி இந்திரா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்....