Home தொழில்நுட்பம் இந்தியாவில் ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் விலை தொடர்பான தகவல்கள் வெளியானது

இந்தியாவில் ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் விலை தொடர்பான தகவல்கள் வெளியானது

ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் விலை தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியானது.

டெல்லி: ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் விலை தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியானது.

இந்தியாவில் ஜன.29-ஆம் தேதி ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது. சர்வதேச அளவில் ஹானர் வி20 என்ற ஸ்மார்ட்போன் கடந்தாண்டு டிசம்பர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதே ஸ்மார்ட்போனை தான் பெயர் மாற்றி தற்போது ஹானர் வியூ 20-ஆக இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடுகிறது. முன்னதாக பாரீசில் நடைபெறும் பத்திரிகையாளர் கூட்டத்தில் ஜன.22-ஆம் தேதி இந்த மாடல் ஸ்மார்ட்போனை ஹானர் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. அதைத் தொடர்ந்து, இந்தியாவில் அமேசான் வலைதளத்தில் ஜன.29-ஆம் தேதி விற்பனைக்கு வெளியாகிறது.

ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் பட்டியலில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, ஹைசிலிகான் கிரின் 980 பிராசஸர், 8 ஜிபி ரேம், 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 48 எம்.பி இரட்டை பிரைமரி கேமரா, 25 எம்.பி செல்பி கேமரா, டுயல் சிம் உள்ளிட்டவை இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ விலை பட்டியல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஜன.29-ஆம் தேதி அமேசான் இணையதளத்தில் இந்த ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.40, 000 விலையில் விற்கப்படும் என்று இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் ஹானர் வி20 ஸ்மார்ட்போன் சார்ம் ப்ளூ, ரெட், மிட்நைட் பிளாக் ஆகிய நிறங்களில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்திகள்

Most Popular

7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக,சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட...

இன்று 2,869 பேருக்கு மட்டுமே கொரோனா!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 4 கோடியே 27 லட்சமாக அதிகரித்துள்ளது. 11 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை...

அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி! கவலைகிடம் என தகவல்

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு. கடந்த 13-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூற சேலம் சென்றார். கார் திண்டிவனம் அருகே சென்றபோது அவருக்கு...
Do NOT follow this link or you will be banned from the site!