Home தொழில்நுட்பம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் அறிமுகம் எப்போது? – புதிய தகவல்

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் அறிமுகம் எப்போது? – புதிய தகவல்

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கேலக்ஸி ஏ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற விவரத்தை சாம்சங் நிறுவனம் ஒரு வழியாக அறிவித்துள்ளது. இன்பினிட்டி ஓ டிஸ்பிளே கொண்டதாக இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலாக சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் விலை ரூ.22,990 ஆக நிர்ணயம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் நாளை (ஜனவரி.29) அறிமுகம் செய்யப்பட இருப்பதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதவிர சாம்சங் கேலக்ஸி ஏ71 மாடல் ஸ்மார்ட்போனையும் நாளை அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் மாடலில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் விலை ரூ.29,990 ஆக நிர்ணயம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிலும் இன்பினிட்டி ஓ டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் மற்ற நிறுவன மாடல்களுக்கு கடும் போட்டியாக விளங்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கைலாசாவில் மருது சகோதரர்களுக்கு நினைவில்லம் அமைக்க கோரி கடிதம்

மதுரை கைலாசா நாட்டில் மருது சகோதரர்களுக்கு நினைவாலயம் அமைக்க வலியுறுத்தி, நித்யானந்தாவிற்கு மருதிருவரின் மக்கள் களம் என்ற அமைப்பு கடிதம் மற்றும் போஸ்டர்கள் மூலமாக கோரிக்கைவிடுத்துள்ளது.இதுதொடர்பாக,...

கட்டுமான நிறைவுச் சான்றின்றி மின் இணைப்பு தர சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!

கட்டுமான நிறைவுச் சான்று இல்லாமலேயே மின் இணைப்பு அனுமதி பெறலாம் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. கோவையை சேர்ந்த நுகர்வோர் அமைப்பு தொடர்ந்த வழக்கில்...

நாகை, கடலூரில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதால் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க உள்ளது....

அக்.26-இல் ராஜராஜ சோழனின் சதயவிழா; கொரோனாவால் நிகழ்ச்சிகள் ரத்து

தஞ்சாவூர் தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழா வரும் 26ஆம் நடைபெறும் என விழாக்குழு அறிவித்துள்ளது. மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சதயவிழா...
Do NOT follow this link or you will be banned from the site!