Home தொழில்நுட்பம் இந்தியாவில் குறைந்த விலையில் 40-இன்ச் 4K ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்தது தாம்சன் நிறுவனம்!

இந்தியாவில் குறைந்த விலையில் 40-இன்ச் 4K ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்தது தாம்சன் நிறுவனம்!

தாம்சன் நிறுவனம் 40-இன்ச் புதிய 4K ஸ்மார்ட் டி.வி மாடலை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது.

டெல்லி: தாம்சன் நிறுவனம் 40-இன்ச் புதிய 4K ஸ்மார்ட் டி.வி மாடலை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது.

தாம்சன் நிறுவனம் 40-இன்ச் புதிய 4K ஸ்மார்ட் டி.வி மாடலை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட் டி.வி.யை யு.டி.9 என அழைக்கிறது. இன்று (மார்ச்.16) முதல் ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் டிஸ்பிளே 3840×2160 பிக்சல் கொண்டதாகும். HDR10, 20W ஆடியோ அவுட்புட், மூன்று ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள் மற்றும் 60Hz ஸ்டான்டர்டு ரிஃப்ரெஷ் ரேட் ஆகிய வசதிகளை இந்த ஸ்மார்ட் டிவி கொண்டிருக்கிறது.

யூடியூப் உட்பட ஆறு செயலிகல் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கின்றன. ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளம் கொண்டு இயங்கும் இதன் விலை இந்தியாவில் ரூ.20,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாப்-எண்ட் டி.வியின் விலை ரூ.37,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தாம்சன் டி.வி.க்களை விற்பனை செய்து வரும் எஸ்.எஸ்.பி.எல். நிறுவனம் 1990 முதல் சந்தையில் பல்வேறு ரக டி.வி. மாடல்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews