Home சினிமா இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்கில் தலயின் விஸ்வாசம் முதலிடம்!! 

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்கில் தலயின் விஸ்வாசம் முதலிடம்!! 

அஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த விஸ்வாசம் திரைப்படம் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்கில் முதலிடம் பிடித்துள்ளது. 

அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி மாத வெளியான படம் விஸ்வாசம். சிவா இயக்கத்தில் சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வெளியாகி சுமார் 100 நாட்கள் மேல் வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடி வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற அப்பா-மகள் பாசத்தை வெளிக்காட்டும் விதமான ‘கண்ணான கண்ணே’ பாடல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது. 

இந்நிலையில் 2019ம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை ட்விட்டரில் அதிக ஹேஷ்டேக்களை தற்போது ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் விஸ்வாசம் திரைப்படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதனால் உற்சாகமடைந்த அஜித் ரசிகர்கள் மீண்டும் #Viswasam என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

ட்விட்டர் ட்ரெண்டிங்கின் இரண்டாவது இடத்தில் #Loksabhaelection2019, மூன்றாவது இடத்தில் #CWC19 என்ற ஹேஷ்டேக்குகளும் இடம்பிடித்துள்ளன. 

மாவட்ட செய்திகள்

Most Popular

ஜிகே வாசனுக்கு இத்தனை தொகுதிகளா? குறிப்பா அந்த தொகுதிகள் மட்டும் தானா?

தேர்தல் பிரச்சாரத்தைக் காட்டிலும் யாருக்கு எத்தனை சீட்டு என்ற தொகுதிப் பங்கீடே பெரியளவில் பேசப்படுகிறது. அதிமுகவிலும் சரி திமுகவிலும் சரி கூட்டணிக் கட்சிகளுடனான இழுபறி பொதுவானதாகவே இருக்கிறது. இருப்பினும், அதிமுக...

எங்க வலிமைக்கு ஏற்ற தொகுதியை கொடுங்க.. மார்க்சிஸ்ட் கட்சி எதிர்பார்ப்பு!

சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் திமுகவுடன் பல கூட்டணிக் கட்சிகள் அதிருப்தியில் இருக்கின்றன. கேட்ட தொகுதிகளை கொடுக்க திமுக மறுப்பதால், புலம்பித் தவிக்கும் கூட்டணிக் கட்சிகள் கொடுத்த தொகுதிகளை வாங்கிக்...

முதிய தம்பதி இரும்பு ராடால் அடித்துக்கொலை… வீடுகட்ட பணம் தராததால் மகன் வெறிச்செயல்…

தருமபுரி தருமபுரி அருகே வீடுகட்ட பணம் தர மறுத்த தாய், தந்தையை இரும்பு ராடால் அடித்துகொன்ற மெக்கானிக்கை போலீசார் கைதுசெய்தனர். தருமபுரி...

“ஆட்டைய கலைங்க; முதல்ல இருந்து ஆரம்பிங்க… மோடி பிரச்சாரத்துக்கு போக கூடாது”

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் என ஐந்து மாநிலங்களில் தேர்தல் குறித்த அறிவிப்பை கடந்த வாரம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேற்கு வங்கம், அசாம் தவிர்த்து...
TopTamilNews