Advertisementஇந்தியாவிலுள்ள அதிபயங்கர கோட்டை எது தெரியுமா..!? மிரட்டும் அமானுஷ்யங்கள்..!  இந்தியாவிலுள்ள அதிபயங்கர கோட்டை எது தெரியுமா..!? மிரட்டும் அமானுஷ்யங்கள்..!  
Home இந்தியா இந்தியாவிலுள்ள அதிபயங்கர கோட்டை எது தெரியுமா..!? மிரட்டும் அமானுஷ்யங்கள்..!  

இந்தியாவிலுள்ள அதிபயங்கர கோட்டை எது தெரியுமா..!? மிரட்டும் அமானுஷ்யங்கள்..!  

எப்போதுமே பிரம்மாண்டமான கோட்டைகளைப் பார்க்கும் எவர்க்கும் பிரமிப்பு ஏற்படுவது இயல்பு. உள்ளே நுழைந்து அணுஅணுவாக சுற்றிப் பார்த்துவிட்டு வரும்போது ‘எப்படியெல்லாம் வாழ்வாங்கு வாந்திருக்காங்கே..’ என்று நமக்குள் ஒரு எண்ணம் ஓடுவதை தவிர்க்க முடியாது.அதே நேரத்தில் சில  கோட்டைகளில் ‘அமானுஷ்யங்களால்’ நிரம்பி  இருப்பதாகச் சொல்லிப்  பயமுறுத்தும் கோட்டைகள் பற்றியும் கேள்விப்பட்டிருப்போம். அப்படியொரு கோட்டையைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

இந்தியாவிலுள்ள அதிபயங்கர கோட்டை எது தெரியுமா..!? மிரட்டும் அமானுஷ்யங்கள்..!  

Prabalgad fort

மஹாராஷ்டிராவில் ‘மாத்தேரான்’  ‘பன்வெல்’ என்ற இடங்களுக்கு இடையில் அமைந்திருக்கிறது இந்த  ‘ப்ரபால்கர் கோட்டை. இது இந்தியாவில் உள்ள மிகவும் பயங்கரமான கோட்டைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. எந்த அளவுக்கு என்றால். இருட்டியதும் யாரும் இந்த கோட்டையைப் பார்க்கப்  போக மாட்டாங்களாம்! போனால்  உசுரோட திரும்ப முடியாது  என்று  சொல்லி  அதிர வைக்கிறார்கள்  அந்தக்  கோட்டைக்கு  அருகில்  இருக்கும்  கிராமத்து  ஆட்கள்.

Trekking in Prabalgad fort

இந்தக்  கோட்டை 2300 அடி உயரம் உள்ள ஒரு மலையின் மீது கட்டப்பட்டுள்ளது. மேலும், இங்கு ஒரு சிலரே வருகைதருவதாகவும், அவர்களும் இருட்டுவதற்குள் அங்கிருந்து திரும்பிவிடுவதாகவும் கூறப்படுகிறது.பயமுறுத்தும் காரணங்கள் இருந்தாலும்,அங்கு மின் வசதி,தண்ணீர் வசதி என எதுவும் இல்லாததும் ஒரு காரணம். தவிர, இந்தக் கோட்டைக்கு போகும் பாதைகள் மிகவும் செங்குத்தான மலைகள் மீது அமைந்திருப்பதால் அவ்வளவு எளிதாகப் போக முடியாது.

அதுமட்டுமன்றி,மெல்ல இருட்டத்  தொடங்கியதும் ஒருவித மயான அமைதி நிலவுவதால் அந்த சூழலே மிகவும் பயங்கரமாக இருக்கும். இந்த கோட்டையை பார்ப்பதற்கு மலையில் ஏறுவதற்கு பாறைகள் மீது படிக்கட்டுகள் மாதிரி வழி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், அதில் எந்த பிடிமானமும்,கயிறுகளும் இல்லை என்பது இன்னும் கிலியை ஏற்படுத்துவதாக இருக்கிறது! அதில் ஏறும்போது கொஞ்சம் சறுக்கினாலும் அப்படியே 2300 அடி ஆழத்தில் இருக்கும் குழிக்குள் விழுவதைத் தவிர வேறு வழியில்லை என்றால் யார்தான் அங்கே இரவில் போவார்கள் !?

Prabalgad fort

இந்த கோட்டைக்கு போனவர்களில் பலர் கவணம் தவறி இறந்திருப்பதாகவும் கணக்குச் சொல்கிறார்கள். இந்தக்கோட்டைக்கு முன்பு ‘முரஞ்சன் கோட்டை’ என்ற பெயர் இருந்ததாகவும், அதன்பின் சத்ரபதி சிவாஜி மஹாராஜாவால் அவரின் ஆட்சியில் இந்த கோட்டைக்கு ‘ராணி கலாவந்தி’ என்று பெயர் சூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

நான் பார்க்காத கோட்டையா … மார்தட்டிக்கொள்ளும் ஆட்கள் மட்டும் நேரமும் தைரியமும் இருந்தால் ஒருமுறை விசிட் அடிக்கலாம்.கோட்டையின் உச்சியிலிருந்து பார்க்கும் போது… வேற லெவல்!

இந்தியாவிலுள்ள அதிபயங்கர கோட்டை எது தெரியுமா..!? மிரட்டும் அமானுஷ்யங்கள்..!  

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

நீட் தேர்வு தோல்வி பயத்தால் வீட்டில் இருந்து வெளியேறிய கோவை மாணவர்… ஜோலார்பேட்டையில் பத்திரமாக மீட்பு!

திருப்பத்தூர் கோவையில் நீட் தேர்வில் தோல்வி பயத்தால் வீட்டில் இருந்து வெளியேறிய மாணவரை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பிரபல ஹாலிவுட் நடிகர் ‘கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன்’மெல்வின் வான் பீபிள்ஸ் மறைவு -ரசிகர்கள் இரங்கல்

கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன் என்று அழைக்கப்படும் பிரபல ஹாலிவுட் இயக்குநர் மெல்வின் வான் பீபிள்ஸ்(89) மறைந்தார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து...

பெங்களூருவில் பயங்கர குண்டுவெடிப்பு… 3 பேர் பலி; நால்வர் படுகாயம்!

பெங்களூருவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். பெங்களூரு புதிய தரகுப்பேட் பகுதியிலுள்ள போக்குவரத்து குடோனில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது என்று சொல்லப்படுகிறது. குண்டுவெடிப்பின்போது...

புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 958 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 958 புள்ளிகள் உயர்ந்தது. அமெரிக்க பெடரல் வங்கி பத்திரங்கள் வாங்குவதை குறைக்கபோவதாகவும், அடுத்த...
TopTamilNews