Home சினிமா இந்தியன் 2 படப்பிடிப்பி நிகழ்ந்த விபத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தேன் - அல்லு அர்ஜுன்

இந்தியன் 2 படப்பிடிப்பி நிகழ்ந்த விபத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தேன் – அல்லு அர்ஜுன்

ஷங்கர் இயக்கத்தில் மாபெரும் படைப்பாகத் தயாராகி வரும் இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.   இந்த படத்தை  லைகா புரொடக்ஷன்ஸ்  தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் செம்பரம்பாக்கத்தில் உள்ள பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து வந்தது. இதையடுத்து நேற்றிரவு 9 மணியளவில் படப்பிடிப்பு தளத்தில், ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த கிரேன் ஒன்று அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில்  கிரேனுக்கு அடியில் சிக்கி உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர்கள் மது மற்றும் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

இந்தியன் 2 படப்பிடிப்பி நிகழ்ந்த விபத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தேன் - அல்லு அர்ஜுன்

இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், “அதிர்ச்சியூட்டும் செய்தியைக் கேட்டேன். பயங்கரமான மற்றும் மனதை நொருக்கக்கூடிய செய்தி இது. இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என பதிவிட்டுள்ளார். 

இந்தியன் 2 படப்பிடிப்பி நிகழ்ந்த விபத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தேன் - அல்லு அர்ஜுன்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

டிஎன்பிஎல்- நெல்லை Vs திருப்பூர்! 3 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் வெற்றி

நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

ஆன்மீக குருவுக்கு சுற்றுச்சூழல் மீது ஏன் இவ்வளவு அக்கறை?- சத்குரு அதிரடி

ஈஷா சார்பில் 'உயிர் நோக்கம்' என்ற 3 நாள் யோகா நிகழ்ச்சி ஜூலை 23 முதல் 25 ஆம் தேதி வரை ஆன்லைனில் இலவசமாக நடைபெற்றது இதில் தமிழ்நாடு முழுவதும்...

17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக நிர்வாகி கைது

சேலம் அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக வார்டு கவுன்சிலர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளார்.
- Advertisment -
TopTamilNews