Home சினிமா 'இந்தியன் 2' படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்: ஆனா அது தர்ஷன் இல்லப்பா...!

‘இந்தியன் 2’ படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்: ஆனா அது தர்ஷன் இல்லப்பா…!

லைகா புரடக்‌ஷன் தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பணியாற்றிய பிரபலம் இந்தியன் 2 படத்தில் இணைந்துள்ளார். 

இந்தியன் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் 22 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் 2 உருவாகி வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் மாபெரும் படைப்பாகத் தயாராகி வரும் இப்படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.   இந்த படத்தை  லைகா புரடக்‌ஷன் தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

indian

இப்படத்தின் படப்பிடிப்பு ஈவிபி  பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக செட் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் கமல் அரசியல்,  பிக் பாஸ் என்று தொடர்ச்சியாக பிஸியாகி விட்டதால் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. ராஜமுந்திரி சிறைச்சாலை சென்னை திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் படப்பிடிப்பு  தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும்  போபாலில் 2 ஆயிரம் துணை நடிகர்களை வைத்து பிரம்மாண்டமான சண்டைக் காட்சியைப்  படமாக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. 

amrita

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கமலின் ஸ்டைலிஷராக பணியாற்றிய அம்ரிதா ராம் இந்தியன் 2 படத்திலும் ஸ்டைலிஷராக பணியாற்றவுள்ளார். வயதான தோற்றத்தில் வரும் கமல் ஹாசனுக்கு ஏற்ற ஆடை அலங்காரங்களை பிஸியாக  தேர்வு செய்து வருகிறார்  அம்ரிதா. இவர் ஏற்கனவே விஸ்வரூபம்-2  படத்தில் பணியாற்றியிருக்கிறார். 

நடிகை  காஜல் அகர்வால்  இந்தியன் 2 படத்தில்  கமல் ஹாசன்  மனைவியாகி 85 வயதான அமிர்தவள்ளி  கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாக குறைத்த எஸ்பிஐ!

கொரோனா ஊடரங்கு காரணமாக தொழில்கள் முடங்கியதுடன் , பலருக்கும் வேலை இழப்பு, தொழில் முடக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு வருவாய் பாதிக்கப்பட்டது.இந்த நிலையில், வங்கிக் கடன் வாங்கியவர்களுக்கு 6 மாதங்கள்...

பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? திருமாவளவன் பளீர்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி, தொகுதி பங்கீடுபோன்ற முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதிமுக பாமகவுடனான...

எம்.ஜி.ஆர். வழி செல்லும் கமல்ஹாசன்!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதி, மயிலாப்பூர் , திநகர் மற்றும் ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று அதிமுக,...

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி! ஓவைசி அதிரடி

தமிழகத்தில் இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிமுக - திமுக என இருகட்சிகளுக்குமே சென்றாலும், முஸ்லீம்களின் வாக்குகள் பெரும்பாலும் திமுகவுக்கே சாதகமாக அமைந்து வருகின்றன. அதற்கு திமுகவுடன் உள்ள கூட்டணி கட்சிகளான மனிதநேய...
TopTamilNews