இந்தா ஓ.பி.எஸும் கிளம்பிட்டார்ல… எந்தெந்த நாடுகளுக்கு போகிறார் தெரியுமா..?

நமது துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும் பக்கோடா சாப்பிட ஆசையிருக்காதா..? அவரும் கோட்டு சூட்டுக்கு ஆர்டர் கொடுத்து விட்டார்.

பிரதமர் மோடி ஸ்டலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி லண்டன் அமெரிக்கா சென்று கோடு சூட்டு போட்டு கலக்கி 14 நாட்கள் ரவுண்டு அடித்து விட்டு திரும்பி விட்டார். edappadi palanisamy

அவர் மட்டுமா? அமைச்சர் செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார் என 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் வெளிநாட்டுக்கு சென்று திரும்பி உள்ளனர்.  இப்படி இருக்கையில் நமது  துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும் பக்கோடா சாப்பிட ஆசையிருக்காதா..?

அவரும் கோட்டு சூட்டுக்கு ஆர்டர் கொடுத்து விட்டார். குறைந்த செலவில் ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது, அதில் நவீன வசதிகள் செய்வது, வெளிநாட்டு மார்க்கெட், பஸ் நிலையங்கள் மாதிரி கோயம்பேடு மார்க்கெட், பஸ் நிலையங்களை நவீனப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய இருக்கிறார்கள். இதற்காக சீனா, சிங்கப்பூர் உட்பட பல வெளிநாடுகளுக்கு போற மாதிரி திட்டம் வகுத்திருக்கிறார் துணை முதல்வர் ஓ.பிஎஸ். ops

முதல்வர் எடப்பாடியின் வெளிநாட்டு பயணத்தில் பத்திரிகையாளர்களை தவிர்த்து விட்டார்கள். ஆனால், துணை முதல்வர் பயணத்தில் பத்திரிகையாளர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு செல்ல உள்ளார் எனக்கூறுகிறார்கள். 

Most Popular

லட்சக்கணக்கில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – உலகளவில் கொரோனா நிலவரம்

சென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்றவையே கொரோனா பரவலைத் தடுக்க கடும் போராட்டத்தில் உள்ளன.  இன்றைய தேதி...

விஜயவாடா தீ விபத்தில் 11 பேர் பலி: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல இடங்கள் கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் விஜயவாடா பகுதியில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றும் கொரோனா வார்டாக மாற்றம்...

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா; 881 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது....

தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக உயர்வு!

கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், நேற்று நொடிக்கு 50,000 கனஅடி...