Home உலகம் இத்தாலியில் கொரோனாவால் ஒரேநாளில் 542 பேர் உயிரிழப்பு

இத்தாலியில் கொரோனாவால் ஒரேநாளில் 542 பேர் உயிரிழப்பு

இத்தாலி நாட்டில் கொரோனா தொற்றால் ஒரேநாளில் 542 பேர் உயிரிழந்தனர்.

இத்தாலியில் கொரோனாவால் ஒரேநாளில் 542 பேர் உயிரிழப்பு

ரோம்: இத்தாலி நாட்டில் கொரோனா தொற்றால் ஒரேநாளில் 542 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 88 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 15 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். சீனாவில் கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கினாலும் தற்போது அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவை காட்டிலும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

italy

இத்தாலி நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17,669-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் இத்தாலி முதல் இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலி நாட்டில் 542-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதுவரை கொரோனாவால் 139,422 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 26,491 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.

இத்தாலியில் கொரோனாவால் ஒரேநாளில் 542 பேர் உயிரிழப்பு
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கோவையில் பாதையை மறைத்து கட்டிய தீண்டாமைச்சுவர் இடித்து அகற்றம்!

கோவை கோவை பன்னிமடை பகுதியில் அருந்ததியர் சமூக மக்கள் குடியிருப்பின் அருகே அமைக்கப்பட்ட தீண்டாமைச்சுவரை அதிகாரிகள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

பென்னிகுயிக் நினைவு இல்லத்தை இடித்து கலைஞர் நூலகம் அமைத்தால் அதிமுக போராட்டத்தில் குதிக்கும்!

தென் தமிழகத்து மக்களின் எதிர்ப்பை மீறி கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தில் கலைஞர் நூலகம் அமைக்கப்படுமேயானால் , விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அதிமுக தெரிவித்துள்ளது.

மூன்று பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய கல்யாணராமன் வங்கி காசாளர் சிக்கினார்

நகை, பணத்திற்காக அடுத்தடுத்து 3 பெண்களை திருமணம் செய்த தனியார் வங்கி காசாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம்...

ஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்கள் வங்கி விடுமுறையா? – உண்மை நிலவரம் என்ன?

ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான விடுமுறை நாட்களை அறிவிக்கும். அதன்படி இந்த ஆகஸ்ட் மாதத்திற்கான விடுமுறை தினங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தமாக சேர்த்து 15 நாட்கள் விடுமுறை தினங்களாக...
- Advertisment -
TopTamilNews