Home சினிமா இதை மட்டும் செய்யாதீங்க: அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்த இளையராஜா

இதை மட்டும் செய்யாதீங்க: அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்த இளையராஜா

அரசியல் லாபத்துக்கு படத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று இசையமைப்பாளர் இளையராஜா தரப்பு அறிவித்துள்ளது.

இதை மட்டும் செய்யாதீங்க: அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்த இளையராஜா

சென்னை: அரசியல் லாபத்துக்கு படத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று இசையமைப்பாளர் இளையராஜா தரப்பு அறிவித்துள்ளது.

நடிகர் நடிகைகள்  பிரசாரம்

vote

மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கிப் பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கிறது.பொதுவாக தேர்தல் என்றாலே நடிகர் நடிகைகளைக் களமிறக்கி பிரசாரம் மேற்கொள்வது வழக்கம். ஆனால் இந்த முறை பிரபலங்கள் யாரும் எதிர்பார்த்த அளவிற்குப் பிரசார களத்தில்  குதிக்கவில்லை. 

திமுகவுக்கு விஜய்  – அதிமுகவுக்கு  ரஜினிகாந்த்

rajini

 

ஆனால் தேர்தல் நெருங்கும் வேளையிலேயே பல முன்னணி பிரபலங்களின் பெயர்களை வைத்து ஓட்டுக் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்..உதாரணமாக மதுரை விஜய் மக்கள் இயக்கத்தினர் திமுக கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு  ஆதரவு கூறினர். இதனால் விஜய் திமுக கூட்டணிக்கு மறைமுகமாக ஆதரவு கூறுகிறார் என்று செய்தி வெளியானது. அதே போல நதிநீர் பிரச்சினை குறித்து பேசிய ரஜினிகாந்த் அதிமுக கூட்டணி என்றனர். ஆனால் உண்மையில் யாரும் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை.

இளையராஜா வேண்டுகோள் 

ilaiayaraja

இந்நிலையில் சில கட்சிகள் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை வைத்து கொண்டு ஓட்டு கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் இது குறித்து  இளையராஜா தரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘மக்களவைத் தேர்தலில்  வாக்குகளைப் பெற சில அரசியல் கட்சிகள்  இளையராஜாவின் புகைப்படத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால்  எந்த‌ அரசியல் க‌ட்சிக‌ளும் இளையராஜாவின் பெயரையோ அல்லது அவ‌ர‌து புகைப்படத்தையோ அர‌சிய‌ல் லாப‌த்திற்காக பயன்படுத்த வேண்டாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தான் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்பதை இளையராஜா வெளிப்படையாக அறிவித்து குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

இதையும் வாசிக்க: வறுமையை பயன்படுத்தி சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்: அதிர்ச்சி தரும் சம்பவம்!

இதை மட்டும் செய்யாதீங்க: அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்த இளையராஜா
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“கட்சிகளுக்கு புதிய சின்னங்களை ஒதுக்குவது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்”

ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகளுக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பதில்...

ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

கொரொனா பரவலால் தமிழக பள்ளி, கல்லூரி மானவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

’’பொய் சொன்னா அறைவேன் என்று சொன்ன நடிகர் சித்தார்த் எங்கே?’’

16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கியது. புதிய ஆசி பொறுப்பேற்ற பின்னர் நடைபெறம் இந்த முதல் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையில் இடம்பெற்றிருப்பது குறித்து...

தளபதி 65 படத்தின் தலைப்பு அறிவிப்பு

நடிகர் விஜய் 65வது படத்தின் First Look வெளியானது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது...
- Advertisment -
TopTamilNews