Home விளையாட்டு இது வெறும் போட்டி தான் போர் அல்ல; ரசிகர்களுக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்!!

இது வெறும் போட்டி தான் போர் அல்ல; ரசிகர்களுக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்!!

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான இன்றைய கிரிக்கெட் தொடர் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்தை சுமார் 100 கோடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான இன்றைய கிரிக்கெட் தொடர் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்தை சுமார் 100 கோடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இது தான் மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிறைந்த போட்டியாகும். இந்த ஆட்டத்தை இரண்டு நாட்டு ரசிகர்களும் பொறுமையாக பார்த்து ரசியுங்கள் என்பது தான் என்னுடைய வேண்டுகோளாகும். 

va

இந்த போட்டியை பார்த்து இரு நாட்டு ரசிகர்களும் சந்தோஷப்பட வேண்டுமே தவிர இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் சூழலை மோசமாக்கக்கூடாது. போட்டி என்று வந்து விட்டால் ஒரு அணி வெற்றி பெறும். ஒரு அணி தோல்வி காணும். எனவே ஆட்டத்தை பொறுமையாக பார்த்து ரசிக்க வேண்டும். இதனை போர் என்று கருதக்கூடாது. இந்த போட்டியை போர் என்று நினைப்பவர்கள் உண்மையான கிரிக்கெட் ரசிகராக இருக்க முடியாது. உலக கோப்பை போட்டியில் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்தினால் பாகிஸ்தான் அணியால் இந்தியாவை வெல்ல முடியும். 

உலக கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் ஆடிய ஆட்டங்கள் அனைத்தும் எனது நினைவில் இல்லை. ஆனால் எல்லா ஆட்டங்களையும் நான் ஒரு ரசிகனாக டெலிவிஷனில் ரசித்து பார்த்து இருக்கிறேன். இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் வலுவாக உள்ளது. ஆனால் பாகிஸ்தானும் எல்லா வகையிலும் அதற்கு நிகரானது தான். இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பொறுத்தமட்டில் எந்த அணி நெருக்கடியை சிறப்பாக கையாள்கிறதோ? அந்த அணி வெற்றி பெறும். முழு போட்டியையும் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். மழையால் இந்த போட்டி பாதிக்கப்படாது என எதிர்பார்க்கிறேன் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

வேல் யாத்திரைக்கு கூட்டம் திரட்ட துணை நடிகைகளின் குத்தாட்டமா?

முருகக் கடவுளை முன்வைத்து கடந்த 20 நாட்களுக்கு மேல் தமிழக பாஜக வேல் யாத்திரையை நடத்தி வருகிறது.திருத்தணியில் தொடங்கிய இந்த யாத்திரை திருச்செந்தூரில் முடிப்பதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது.

அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படவுள்ள நிலையில் அடையாறு ஆற்றங்கரையோர மக்கள் வெள்ள நிவாரண முகாம்களுக்கு செல்ல சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளார். மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி...

பாலியல் குற்றமா… இனி இதுதான் தண்டனை! அதிர வைக்கும் பாகிஸ்தான்

இந்தியாவில் ஒரு வருடத்திற்கு பாலியல் வழக்குகள் மட்டுமே 33 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பதியப்படுகின்றனவாம். கணக்கிட்டுப் பார்த்தால் நாள் ஒன்றுக்கு 90 வழக்குகளுக்கும் அதிகம். அப்படியெனில் ஒரு மணி நேரத்திற்கு ஏறத்தாழ...

“பேனர், பதாகைகளை அகற்றுங்கள்” – சென்னை மாநகராட்சி உத்தரவு!

நிவர் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதிகமாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு வசிக்கும் மக்கள் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த புயல்...
Do NOT follow this link or you will be banned from the site!