Home இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு லாபம் பார்த்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா....

இதுவரை இல்லாத அளவுக்கு லாபம் பார்த்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா….

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடந்த டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.5,583.36 கோடி ஈட்டியுள்ளது. இந்த வங்கி இதுவரை எந்தவொரு காலாண்டிலும் இந்த அளவுக்கு லாபம் ஈட்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இந்த நிதியாண்டின் 3வது காலாண்டு (2019 அக்டோபர்- டிசம்பர்) நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது. இதுவரை எந்தவொரு காலாண்டிலும் இல்லாத அளவுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடந்த டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.5,583.36 கோடி ஈட்டியுள்ளது. இது 2018 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 41.17 சதவீதம் அதிகமாகும்.

எஸ்.பி.ஐ.

2019 டிசம்பர் காலாண்டில் ஸ்டேட் பேங்க் இந்தியாவின் நிகர வட்டி வருவாய் 22.42 சதவீதம் அதிகரித்து ரூ.27,778.79 கோடியாக உயர்ந்துள்ளது.மேலும் இந்த வங்கியின் வாராக் கடன் நிலவரமும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த வங்கியின் நிகர வாராக் கடன் 3.95 சதவீதத்திலிருந்து 2.65 சதவீதமாக குறைந்துள்ளது. மொத்த வாராக் கடன் 8.71 சதவீத்திலிருந்து 6.94 சதவீதமாக குறைந்துள்ளது.

எஸ்.பி.ஐ.

அதாவது மொத்த வாராக் கடன் ரூ.1.88 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.59 லட்சம் கோடியாகவும், நிகர வாராக் கடன் ரூ.80,943 கோடியிலிருந்து ரூ.58,248 கோடியாகவும் குறைந்துள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

“மட்டையான பெண்ணை வேட்டையாடிய நண்பர்கள்”-பர்த்டே பார்ட்டிக்கு போன பெண் மேனேஜர் டேமேஜ் ஆன கதை

ஒரு பெண் ஈவென்ட் மேனேஜர் தன்னுடைய ஆண் நண்பர்களால் மதுவுக்குள் மயக்க மருந்து கலந்து கொடுக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பலருக்கு பாடமாக அமையும்.

‘மூன்றாவது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்’ : டெல்லியில் பரபரப்பு!

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகளின் போராட்டங்கள் 3ஆவது நாளாக தொடருகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு...

மீண்டும் புயல் : தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் !

அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த...

கொரோனாவுக்கு இதுவரை 1.36 லட்சம் பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், உலக நாடுகளில் இரண்டாம் கட்ட அலையில் கொரோனா இருப்பதால் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தீபாவளி...
Do NOT follow this link or you will be banned from the site!