Home சினிமா இணையத்தில் வைரலான கேஜிஎஃப் யாஷ் மற்றும் மோகன்லால் புகைப்படங்கள் 

இணையத்தில் வைரலான கேஜிஎஃப் யாஷ் மற்றும் மோகன்லால் புகைப்படங்கள் 

சமீபத்தில், கன்னட நட்சத்திரம் யாஷ் மற்றும் மலையாள நட்சத்திரம் துல்கர் சல்மானும் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இருவரும்  படப்பிடிப்பில் இருந்தபோது சந்தித்துக் கொண்டனர்.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் கேஜிஎஃப் யாஷ் பேசிக்கொண்டிருக்கும் படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.

சமீபத்தில், கன்னட நட்சத்திரம் யாஷ் மற்றும் மலையாள நட்சத்திரம் துல்கர் சல்மானும் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இருவரும்  படப்பிடிப்பில் இருந்தபோது சந்தித்துக் கொண்டனர். இருவரும் சந்தித்ததை ஒருவருக்கொருவர் பாராட்டி சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். இருவரிடையேயான நட்பு அவர்களின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

 

 

துல்கர் சல்மானின் புகைப்படங்களை பகிர்ந்த யாஷ் “இன்று எனது சொந்த ஊரில் இந்த சிறந்த நடிகரை சந்தித்தேன். துல்கர் திறமையான நடிகர் மற்றும் மிகவும் பணிவு கொண்டவர்! அவரது படங்களின் தேர்வை நான் எப்போதும் பாராட்டியிருக்கிறேன். நமது தலைமுறையின் ஆகச் சிறந்த நடிகர்.நீங்கள் அடுத்த முறை என் சொந்த ஊருக்கு வரும்போது,​பெரிய விருந்து உங்களுக்காக காத்திருக்கும்” என்று பதிவிட்டிருந்தார்.

 

 

இப்போது, ​மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் யாஷ் இருக்கும் புகைப்படம் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தில் இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருப்பது போல் உள்ளது.

 

 

கேஜிஎஃப் திரைப்படம் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை அடைந்தது. கன்னட சினிமாவிற்கு தனி பெருமையை தேடிக்கொடுத்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அனைவரும் மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

துணை வாக்குச்சாவடி மையங்களில், தஞ்சை ஆட்சியர் நேரில் ஆய்வு!

தஞ்சை தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள துணை வாக்குச்சாவடி மையங்களை, மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அர்ஜுன மூர்த்திக்கு ரோபோ சின்னம் ஒதுக்கீடு

ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கப்போவதாக சொன்னதும் பாஜகவில் இருந்து விலகி ரஜினியுடன் கைக்கோர்த்தார் அர்ஜூனமூர்த்தி. அவருக்கு, ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பும் கொடுத்த ரஜினிகாந்த், கடைசியில் கட்சியே தொடங்கவில்லை. உடல்நிலையை கருத்தில்...

ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டியிடும் கமல்ஹாசன்!

ஆலந்தூர், கோவை தெற்கு ஆகிய 2 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்சென்னை தொகுதி, மயிலாப்பூர்...

தமிழகத்தில் மீண்டும் முதலிலிருந்து தொடங்கும் கொரோனா யுத்தம்!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 11 கோடியே 40 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 25 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய...
TopTamilNews