Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் இடுப்புக்கு கீழே எந்த பிரச்சினை இருந்தாலும், இந்தக் கீரை இருந்தால் போதும்!

இடுப்புக்கு கீழே எந்த பிரச்சினை இருந்தாலும், இந்தக் கீரை இருந்தால் போதும்!

இந்த அதிசயமான கீரையின் பெயர் துத்தி.அழகான மஞ்சள் பூக்களுடன் மூன்றடி உயரம் வரை வளரக்கூடிய துத்திச் செடியை தென்னிந்தியா முழுவதும் சாலை ஓரங்களிலேயே சாதாதரணமாகப் பார்க்கலாம்.

இடுப்புக்கு கீழே எந்த பிரச்சினை இருந்தாலும், இந்தக் கீரை இருந்தால் போதும்!

இந்த அதிசயமான கீரையின் பெயர் துத்தி.அழகான மஞ்சள் பூக்களுடன் மூன்றடி உயரம் வரை வளரக்கூடிய துத்திச் செடியை தென்னிந்தியா முழுவதும் சாலை ஓரங்களிலேயே சாதாதரணமாகப் பார்க்கலாம்.

இதில் மொத்தம் 29 வகைகள் இருக்கின்றன.வட்டத்துத்தி,பெருந்துத்தி,
சிறுதுத்தி,கருந்துத்தி,காட்டுதுத்தி என பட்டியல் நீளும்.இதில் நிலத்துத்தி அல்லது பனியாரத் துத்தி எனப்படும் வகைதான் மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டது. 

இதன் இலைகள் இதய வடிவில் இருக்கும்.இதன் பூக்கள்.அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.காய்கள் வட்ட வடிவில் ஒரு பச்சை நிற தோடு போல் இருக்கும்.துத்தியின்  வேர்முதல்,இலைகள்,பூ,விதைகள் அனைத்தையுமே  சிறப்பான நாட்டு மருந்துகளாக பயன் படுத்தலாம்.

thuthi keerai ttn

முதலில் இதன் வேரில் இருந்து துவங்குவோம்.துத்திச் செடியி வேரை நன்றாகக் கழுவி நீரில் ஒரு பதினைந்து நிமிடம் கொதிக்கவிட்டு வடிகட்டி பருகிவந்தால் உடலின் நரம்பு மண்டலம் பலமடையும்.துத்தி வேருடன் மூக்கிரட்டை வேரையும் சேர்த்து காய்ச்சி சிறிது தேன் கலந்து பருகிவர சிறு நீரக கோளாருகள் சுகமாகும்.

துத்தி இலையை சின்ன வெங்காயம்,பாசிப் பருப்புச்சேர்த்து கூட்டாகச் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.துத்தி இலையை அரைத்து தோசைமாவில் கலந்து தோசையாகச் செய்தும் சாப்பிடலாம்.முழங்கால்,கால் பாதம் போன்ற இடங்களில் சிறுநீரகக் கோளாறுகளால் வீக்கம் ஏற்படும்போது,துத்தி இலையை நீரில் போட்டு வேகவைத்து அதில் துணியை நனைத்து வீக்கம் உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்தால் வீக்கம் குறையும்

துத்தி இலையையும் வேலிப்பருத்தி இலையையும் சமஅளவில் எடுத்து அதனை சாறு பிழிந்து (200 மில்லி அளவுக்கு) அந்தச் சாற்றால் பல் கூச்சம்,பல் வலி,ஈறுகளில் ரத்தம் கசிவது போன்ற துண்பங்களில் இருந்து விடுதலை பெறலாம்.

நாள் முழுதும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதாலும்,நீண்ட தூரம் பயணம் செய்வதாலும்,புரோட்டா போன்ற துரித உணவுகளை உண்பதாலும் ஏற்படும் மலச்சிக்கலுக்கும் இது அரு மருந்து.துத்தி இலையில் சூப் செய்தோ,இதன் சாற்றுடன் பால்,தேன் கலந்தோ சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும்.

thuthi keerai ttn

நாட்பட்ட வெளி மூலம் இதத்த மூலம் உள்ளவர்கள்,துத்தி இலையை ஆமனக்கு எண்ணையில் வதக்கி ஒரு வெற்றிலையில் வைத்து ஆசனவாயில் வைத்து கட்டிக்கொண்டு வர நாட்பட்ட மூல வியாதி குணமாகும்.

அடுத்தது துத்தி பூ.இதை நிழலில் நன்றாக உலர்த்தி பொடியாக்கி அதனுடன்,பாலும் பனங்கற்கண்டும் சேர்த்து பருகிவந்தால் நுரையீரல் கபம், இருமல், இரைப்பு, காசநோய்,இரத்த வாந்தி முதலியவை குணமாகும் என்று அகத்தியர் நாடி சொல்கிறது.

துத்திக்காயில் உள்ள விதைகளை இடித்து பொடியாக்கி,அதனுடன் கற்கண்டும், தேனும் சேர்த்து சாப்பிட்டு வர வெண்மேகம்,உடற்சூடு,கைகால்களில் படரும் சரும நோய்கள்,வெள்ளை படுதல் ஆகியவையும் குணமாகும்.

கடைசியாக முக்கியமான விஷயம்,துத்திபூவை,காம்பு,மொக்குகளோடு சேர்த்து பறித்து அதை சிறிது கருப்பட்டி சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் ஆண்மை பெருகும்.

இடுப்புக்கு கீழே எந்த பிரச்சினை இருந்தாலும், இந்தக் கீரை இருந்தால் போதும்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

தாளவாடியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் முத்துச்சாமி!

ஈரோடு தாளவாடி தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ‘மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

கடுமையாக்கப்படுமா கட்டுப்பாடுகள்? – முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை குறைந்திருந்த நிலையில், கடந்த ஒரு வார...

தமிழைக் கட்டாய அர்ச்சனை மொழியாக்கி புதிய சட்டம் இயற்ற வேண்டும் – தெய்வத் தமிழ்ப் பேரவை -செயற்குழு கூட்ட தீர்மானம்

தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழுக் கூட்டம், இன்று காலை - குடந்தை வட்டம் - திருவேரகம் (சாமிமலை) - சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு, இறைநெறி இமயவன் தலைமை...

ராஜேந்திர பாலாஜியின் பழைய ஃபைல்கள்… அனுமதி கொடுத்த ஹைகோர்ட் – பீஸ்ட் மோடில் திமுக அரசு!

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2011 முதல் 2013ஆம் ஆண்டு வரைவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தைச் சேர்ந்த...
- Advertisment -
TopTamilNews