வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பருவ மழை கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் பரவலாக மழை பெய்து வந்தது. இதனிடையில், மஹா புயல், புல் புல் புயல் எச்சரிக்கை எல்லாம் விடுக்கப்பட்டது. ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் காரணமாக வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வழக்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சென்னையைப் பொருத்தவரை மழை குறைவாகவே இருந்தது.
இந்நிலையில், வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாகத் தஞ்சாவூர், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையைப் பொருத்தவரை வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.