Home தமிழகம் 'ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கிய காளை' : காயங்களுடன் மீட்பு !

‘ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கிய காளை’ : காயங்களுடன் மீட்பு !

கடந்த மாதம் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சிறுவன் சுர்ஜித்தின் மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

'ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கிய காளை' : காயங்களுடன் மீட்பு !

கடந்த மாதம் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சிறுவன் சுர்ஜித்தின் மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு, மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூடும் படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர். ஆனால், இன்னும் பல ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் இருப்பதாக கிராம மக்கள் கோரிக்கைகளை முன்வைத்த வண்ணமே உள்ளது. 

Surjith

இந்நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள  சொக்கலிங்கபுரத்தில் கோவில்  காளை ஒன்று வளர்க்கப்பட்டு வந்துள்ளது. அந்த காளை, நேற்று மாலை விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென அந்த காளை அங்கிருந்த 4 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. காளையின் பின்புற கால்கள் உட்பட பாதி உடல் ஆழ்துளைக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால், மிரண்டு போன காளை வலியால் பயங்கரமாக சத்தமிட்டுள்ளது. 

 காளை

காளையின் சத்தம் கேட்டு அங்கே சென்ற அப்பகுதி இளைஞர்கள் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த காளையை பத்திரமாக மீட்டுள்ளனர். கிணற்றுக்குள் விழுந்ததில் அந்த காளையின் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 காளை

 சிறுவன் உயிரிழந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் அரசு ஆழ்துளைக் கிணறுகளை மூட இன்னும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. ஏதேனும் நிகழ்ந்தால் மட்டுமே அதில் நடவடிக்கை எடுக்கும் அரசு, மற்றொரு உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் விரைந்து செயல்பட்டு அனைத்து ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

'ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கிய காளை' : காயங்களுடன் மீட்பு !
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளை வாபஸ் பெற முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. தேர்தலின்...

“மாணவர்களை அலைக்கழைக்காதீர்கள்… தாமதமின்றி வழங்குங்கள்” – அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடமிருந்து வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் கோரி பெறப்படும் மனுக்கள் மீது எவ்விதக் கால தாமதமுமின்றி உடனடியாகப் பரிசீலித்து,...

இந்தியாவுல ஃபர்ஸ்ட்.. வேர்ல்டுல 11ஆவது – உலகளவில் டிரெண்டாகி மாஸ் காட்டும் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி அனைத்துவிதமான ஊடக வழியாகவும் நாட்டு மக்களிடம் தொடர்பில் இருந்துகொண்டே இருப்பார். சொல்லப்போனால் அதுதான் அவரின் பலமும் கூட. மன்கி பாத் மூலம் வானொலியில் உரையாடுவார். அந்த நிகழ்ச்சி...

வயிற்று வலியால் துடித்த மாணவி.. டாக்டர் சொன்னதை கேட்டு துடித்த பெற்றோர்

பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான பக்கத்துவீட்டு இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சென்னை அடுத்த திருமுல்லைவாயலில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
- Advertisment -
TopTamilNews