Home க்ரைம் ஆற்றில் வீசப்பட்ட மகள் ! சிறைக்கு செல்லும் தாய் !

ஆற்றில் வீசப்பட்ட மகள் ! சிறைக்கு செல்லும் தாய் !

மகள் காதல் செய்வதை ஏற்க முடியாத பெற்றோர் அவரை கொலை செய்ய திட்டமிட்ட அதிர்ச்சி சம்பவம் தேனி மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.

ஆற்றில் வீசப்பட்ட மகள் ! சிறைக்கு செல்லும் தாய் !

மகள் காதல் செய்வதை ஏற்க முடியாத பெற்றோர் அவரை கொலை செய்ய திட்டமிட்ட அதிர்ச்சி சம்பவம் தேனி மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.

theni

தேனி மாவட்டம் ஊத்துபட்டியை சேர்ந்த விவிதா கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் அம்மாபட்டிய சேர்ந்த செல்லபாண்டி என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் வீட்டிற்கு தெரியவர விவிதா தந்தை ராஜாவும் அவரது மனைவி கவிதாவும் கண்டித்துள்ளனர். ஆனால் விவிதா காதலை கைவிட மறுத்து மேலும் அதற்கு தீனி போட்டு வளர்த்துள்ளார். இதனால் பெற்றோருக்கு ஆத்திரம் அதிகமானது.

இந்நிலையில் இந்நிலையில் விவிதாவை கல்லூரியில் இருந்து அழைத்து வந்த பெற்றோர்கள், சின்னமன்னூர் ஆற்றின் அருகே அழைத்து சென்றனர். படிக்கும் வயதில் காதலித்து வாழ்க்கைய சீரழித்துக் கொள்ள வேண்டாம் என விவிதாவிடம் கெஞ்சி உள்ளனர் பெற்றோர். இதனால் கோபம் அடைந்த விவிதாக மேலும் வாக்குவாதம் செய்துள்ளார். செல்லபாண்டியன்தான் என் கணவன் இதை யாராலும் தடுக்க முடியாது என ஆவேசமாக பேசினார். இதற்கு மேல் பொறுத்திருந்தால் வேலைக்கு ஆகாது என நினைத்த பெற்றோர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் விவிதாகை சின்னமன்னூர் ஆற்றில் தள்ளிவிட்டுள்ளனர். அரைகுறை நீச்சல் தெரிந்த விவிதா ஆற்றில் தத்தளிக்க அதை பார்த்த போலீசார் உடனடியாக அவரை மீட்டனர். பின்னர் விவிதா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது தந்தை ராஜா, தாய் கவிதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்”

பிள்ளைகள் சான்றோனாக இருக்கக் கூடத் தேவையில்லை. போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பாமல் இருந்தால் போதும் என சில பெற்றோர் கூறுகின்றனர்.

ஆற்றில் வீசப்பட்ட மகள் ! சிறைக்கு செல்லும் தாய் !
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 58 சரவன் நகை கொள்ளை!

கரூர் கரூர் அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் 58 சரவன் தங்க நகைகளை திருடி சென்றனர். கரூர்...

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த 3 பெண்கள் முன்ஜாமீன் மனு – உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சுசில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார். மாணவிகளை மூளைச் சலவை செய்ததாக...

2 ஜிபி இலவச டேட்டா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் – கமல்ஹாசன் ட்வீட்!

கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஏழை மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கும் திட்டத்தை...

’’அணில் ராமேஸ்வரம் to இலங்கைக்கு பாலமே கட்டியிருக்கும் போது, கரண்ட் கம்பிய கடிக்காதா?’’

மின்தடை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன ’அணில்’ பதில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. மின் கம்பிகளின் மீது அணில்கள் ஓடுவதால் கம்பிகள் ஒன்றோடு...
- Advertisment -
TopTamilNews