Home அரசியல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வாரி இறைத்தது இவர் பணமா? வெளியான பகீர் தகவல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வாரி இறைத்தது இவர் பணமா? வெளியான பகீர் தகவல்

டிடிவி தினகரனுக்கு விவி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜன் பணம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் வருமான வரித்துறையிடம் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: டிடிவி தினகரனுக்கு விவி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜன் பணம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் வருமான வரித்துறையிடம் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விவி மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகள் என 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 6 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த சோதனை இன்று முடிவடைந்ததாகவும், அதில் விவி மின்ரல்ஸ் வைகுண்டராஜன் குறித்த பல்வேறு ரகசியங்கள் வருமான வரித்துறையிடம் சிக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது டிடிவி தினகரன் டோக்கன் கொடுத்து வெற்றி பெற்றதாக அப்போதே செய்தித் தாள்களில் தகவல் வெளியாகியது. பல கட்ட சோதனைகளுக்குப் பின்னும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரன் தரப்பினர் கோடிக் கணக்கில் வாரி இறைத்ததாகவும் விவரமறிந்தவர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில், ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது டிடிவி தினகரனுக்கு 2.5 கோடி ரூபாய் பணத்தை வைகுண்டராஜன் கொடுத்ததற்கான ரகசிய ஆவணங்கள் வருமான வரித்துறையிடம் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஈரோடு- தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை

ஈரோடு ஈரோடு அருகே சென்ட்ரிங் மெட்டீரியல் வாகைக்கு விடும் தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம்...

“ரம்மி விளையாடி டம்மி ஆனேன் ” -ஆன்லைன் சீட்டுக்கட்டில் 30 லட்சம் இழந்த வாலிபர் பண்ண வேலை

ஆன் லைன் ரம்மி விளையாட்டில் 30 லட்ச ரூபாய் இழந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல ஆன்லைன் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு பாடமாக அமையும் .

’50 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு’ விரைவில் மீளுமா இந்தியா!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் நாளொன்றுக்கு சுமார் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில், பாதிப்பு...

திண்டுக்கல்- அரசு கல்லூரி அமைக்கக் கோரி ஆட்சியரிடம், பள்ளி மாணவர்கள் மனு

திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் அரசு கல்லூரி அமைக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மாணவர்கள் மனு அளித்தனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தையொட்டி...
Do NOT follow this link or you will be banned from the site!